கடையம் வனச்சரகத்தில் விவசாய குறை தீர்க்கும் கூட்டம்..!
சிவ சைலத்தில் வனத்துறை சார்பில் விவசாய குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்
கடையம் வனச்சரகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட சிவசைலத்தில் வைத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் வனவிலங்குகள் மனிதர்கள் மோதல் ஏற்படுவதால் சேதம் குறித்தும் மலை கிராம மக்களின் மற்றும் விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டம் சிவசைலத்தில் நடைபெற்றது.
சமீப காலமாக விலங்குகள் மனிதர்கள் மோதல் அதிகரித்து வருகிறது. வனத்தில் இருந்து விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது அல்லது விவசாய நிலங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களால், விவசாயிகள் விலங்குகளை கொல்ல முயல்கின்றனர்.
சிறிய விலங்காக இருந்தால் மனிதர்களை எதிர்க்க முடியாத விலங்குகள் இறந்து போகின்றன. இதுவே யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் மனிதர்களை கொன்றுவிடுகிறது. இதைப்போன்ற மனித, விலங்கு மோதல்களை தவிர்ப்பதற்கு வன அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதில் ஒன்றுதான் விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்களுக்கான குறைதீர் கூட்டம்.
சிவசைலத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்திற்கு கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமை வகித்தார்.சிவசைலம் ஊராட்சி மன்ற தலைவர் மலர்மதி சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.மேலாம்பூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வின்சென்ட் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முத்துராஜ்,உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் விவசாயி சங்கர பாண்டியன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu