சாப்பாடு கொடுக்காததால் ஆத்திரம்; மருமகளின் கழுத்தறுத்த மாமனார்

சாப்பாடு கொடுக்காததால் ஆத்திரம்; மருமகளின் கழுத்தறுத்த மாமனார்
X

பைல் படம்.

கடையத்தில் உணவு வழங்காததால் ஆத்திரமடைந்த மாமனார், மருமகளை கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம், கீழக்கடையம் குமரேசபுர காலணியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 74. இவரது மருமகள் ஸ்ரீஜா வயது 43. இவர் கடந்த ஒராண்டாக தனது மாமனாருக்கு சரிவர உணவு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் இன்று முகசவரம் செய்யும் கத்தியால் ஸ்ரீஜா கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.

இதில் காயமடைந்த ஸ்ரீஜா தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபபட்டார். மாமனார் சுப்பிரமணியனை கடையம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story