கடையம் அருகே முயலை வேட்டையாட முயற்சி: இருவருக்கு ரூ.50,000 அபராதம்

கடையம் அருகே முயலை வேட்டையாட முயற்சி: இருவருக்கு ரூ.50,000 அபராதம்
X

முயலை வேட்டையாட முயன்ற இருவர்.

கடையம் அருகே முயல் வேட்டையாட முயன்ற இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடையம் அருகே முயல் வேட்டையாட முயன்ற இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆயிரப்பேரி பீட் பகுதியில் வேட்டை நாய்களை வைத்து முயல்களை வேட்டையாட முயன்ற தங்கராஜ் மற்றும் சந்துரு ஆகிய இருவரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடையம் வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்பு கொண்டதால் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில் தலா ரூ. 25000 இணக்க கட்டணமாக மொத்தம் ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய நாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!