ஆலங்குளம்: மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஆலங்குளம்: மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ சார்பில் ஆர்ப்பாட்டம்.
X

மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ சார்பில் ஆர்ப்பாட்டம்.

ஆலங்குளம் அருகே மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசை கண்டித்து சி.பி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அருகே உள்ள வெள்ளகால் பகுதியில் சிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, தமிழகத்திற்கு முழு அளவு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி தொழிற்சாலை செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும், ஜிஎஸ்டி வரியில் தமிழகத்திற்கு வழங்க கூடிய தொகையை உடனே வழங்க வேண்டும், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் உள்ளீட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!