ஆலங்குளம்- விதிமுறைகளை மீறி யானை மீது மாப்பிள்ளை ஊர்வலம்.

ஆலங்குளம்- விதிமுறைகளை மீறி யானை மீது மாப்பிள்ளை ஊர்வலம்.
X

விதிமுறைகளை மீறி யானை மீது மாப்பிள்ளை ஊர்வலம்.

ஆலங்குளம் அருகே விதிமுறைகளை மீறி யானை மீது மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்றது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்று வருகிறது. சிலர் விதிமுறைகளை மீறி ஆடம்பரமாக திருமணம் செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு திருமணம் நல்லூர் அருகே உள்ள காசியாபுரம் கிராமத்தில் வைத்து நடைபெற்றது. அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி யானையின் மீது மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது.

மேலும் திருமண விழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தற்போது ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிகமான நோய் தொற்றுப் பரவி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நிகழ்வுகளை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற நிகழ்வுகளை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story