தென்காசியில் அரசு உத்தரவை மீறிய கடைகள், வாகனங்களுக்கு அபராதம்-அதிகாரிகள் அதிரடி

தென்காசியில் அரசு உத்தரவை மீறிய கடைகள், வாகனங்களுக்கு அபராதம்-அதிகாரிகள் அதிரடி
X
வீரகேரளம்புதூர் பகுதியில் அரசு உத்தரவை மீறிய கடை, வாகனங்களுக்கு ரூ 11ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசினால் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வீரகேரளம்புதூர் பகுதிகளில் உரிய அனுமதி பெற்ற மளிகை கடைகளிலிருந்து பொதுமக்களுக்கு வீடு தேடி காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறதா? என வீகேபுதூர் வட்டாட்சியர் வெங்கடேஷ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது உரிய அனுமதியின்றி இயங்கி வந்த மொத்த வியாபார கடையின் உரிமையாளருக்கு ரூ.5000/- மற்றும், சாலையில் செல்லும் இருசக்கர,நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்ததில் உரிய அனுமதி இன்றி பீடி இலை மூடைகளை ஏற்றி வந்த வாகனத்திற்கு ரூ.5000/- மற்றும் மருத்துவ காரணங்களுக்காக முகக்கவசம் இன்றி வந்த 5 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1000 ஆக மொத்தம் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!