வெயில் வறுத்தெடுக்கும் இன்னும் ஒரு வாரம் கவனம்..!

வெயில் வறுத்தெடுக்கும்  இன்னும் ஒரு வாரம் கவனம்..!
X

வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு 

இன்னும் ஒரு வார காலத்திற்கு பகலில் வெப்பநிலை மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரும்.

மிகவும் அதிகபட்சமாக ஒரிரு இடங்களில் 7 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என வானிலை அறிக்கை எச்சரிக்கிறது. இது அக்னி நட்சத்திர காலத்து வெப்பத்தை விட அதிகம். எனவே வீட்டின் ஜன்னல் கதவுகளை காற்றோட்டமாக திறந்து வைத்து வீட்டிற்குள் அமருங்கள். வீட்டுத்தரைகளில் போர்வை விரித்து தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள். தண்ணீர் காய்ந்து விட்டால் மறுபடியும் தெளித்துக் கொள்ளுங்கள்.

தாகத்திற்கு குளிர்ந்த நீர் அருந்துங்கள். பிரிட்ஜில் வைத்த தண்ணீர் வேண்டாம். மண்பானைகளில் வைத்து பயன்படுத்தும் தண்ணீரை அருந்துங்கள். எந்த காரணம் கொண்டும், கார்பனேட் குளிர்பானங்களை குடிக்க வேண்டாம். பகலில் டீ, காபியும் வேண்டாம்.

இளநீர், பதநீர், நீர் மோர், பழச்சாறு, லஸ்ஸி போன்ற உள்நாட்டு தயாரிப்புகளை அருந்துங்கள். இது தான் இயற்கையாக உடலை குளிர்விக்கும் வழிமுறைகளாகும். பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிருங்கள்.

அத்யாவசியமாக செல்ல வேண்டியிருந்தால் வெண்மை நிற குல்லாய் அணிந்து செல்லுங்கள். சூரிய வெப்பத்தினால் தாக்குதல் நேர்ந்தால், பருப்பு நீரில் சிறிதளவு கல் உப்பு கலந்து அருந்துங்கள். வந்தபின் என்பதை தவிர்த்து வருமுன் தற்காத்துக் கொள்ளுங்கள்.

Tags

Next Story
ai automation in agriculture