கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தல்? தமிழக அரசு மறுப்பு...

கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தல்? தமிழக அரசு மறுப்பு...
X

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்பு படம்).

கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கனிமவளங்கள் கடத்தப்படவில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா மாநிலத்துக்கு சட்ட விரோதமாக கனிம வளஙகள் கடத்தப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், கனிமவள கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுகக் வேண்டும் என வலியுறுத்தி, கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னனூர், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், 80 சதவீத குவாரிகள் உரிய அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக புகார் தெரிவித்துள்ளார்.

அந்த கல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் கற்கள், ஜல்லிகள், எம். சாண்ட் போன்றவை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாகவும், அதற்கு அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவதாகவும் மனுவில் கோபி குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அங்கிய அமர்வு, மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செயப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், உயர் நீதிமன்ற உத்தரவை அடித்து கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக குவாரிகள் இயங்கி வருகிறதா? என தாசில்தார்கள் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் மனுவில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டின் படி, கோவை மாவட்டதில் அனுமதியின்றி சட்ட விரோதமாக குவாரிகள் எதுவும் இயங்கவில்லை என தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக கூறப்பட்ட புகாருக்கும் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட் விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க குழுக்குள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த குழுக்கள் கடத்தலை தடுக்கும் வகையில் சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்