தமிழ்வழி கல்வி சான்றுகள் வாங்கணுமா? எப்டீன்னு பாருங்க..!

Tamil Vali Kalvi Certificate
X

Tamil Vali Kalvi Certificate

Tamil Vali Kalvi Certificate-தமிழ்வழி கல்வி கற்றதற்கான மாதிரி சான்றுகளின் விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

Tamil Vali Kalvi Certificate-தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று வேண்டி விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தற்கான சான்று வேண்டி தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்பதற்கான மாதிரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. (பெயர் மற்றும் முகவரி கற்பனை)

அனுப்புநர்

மாதவி,

2/11, பாண்டியன் நகர்,

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம்.

பெறுநர்

தலைமை ஆசிரியர் அவர்கள்,

அரசு மேல்நிலைப்பள்ளி,

ராசிபுரம்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : தமிழ்வழிக் கல்விக்கான சான்று பெறுதல் சார்பு

tamil vali kalvi certificate-வணக்கம். நான் நமது பள்ளியில் (2018-2019) ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தேன்.எனது வேலைவாய்ப்பு விண்ணப்பத்துடன் இணைக்க எனக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று தேவைப்படுகிறது. ஆகையால் தமிழ் வழியில் நான் பயின்றதற்கான சான்றிதழ் வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,

இப்படிக்கு

உண்மையுள்ள,

(கையெழுத்து)

மாதவி

தேதி:26/02/2022

......................................................................

தேவையான ஆவணங்கள்:

நகல்: 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

-------------------------------------

குறிப்பு:

+2 வில் யாராவது தனித்தேர்வு எழுதி இருந்தால், அவர்கள் TNPSC GP 1&2 விற்கான தமிழ்வழி சான்றிதழ் அரசுத் தேர்வு இயக்ககத்தில் (சென்னை) மட்டுமே பெறமுடியும்.

இங்கு மாதிரி சான்றுகளுக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதை 'கிளிக்' செய்து மாதிரி சான்றுகளை காணலாம் :-

https://drive.google.com/file/d/1kChDE_q_TTkIWOFUa9rAh0rRjdYT39jj/view?usp=ஷரிங்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!