மதுகோப்பைக்குள் தமிழ்நாட்டின் ஜனநாயகம் ..?
மதுகோப்பைக்குள் தமிழ்நாட்டின் ஜனநாயகம் இது பற்றிய அதிர்ச்சியான சில புள்ளி விவரங்களை பார்ப்போம்
தமிழகத்தில் தினமும் 37 லட்சம் பேர் மது குடிக்கின்றனர். தவிர ஒரு கோடிய 21 லட்சம் பேர் வாரந்தோறும் இரண்டு நாள் குடிக்கின்றனர். இது தவிர மேலும் ஒரு கோடியே 5 லட்சம் பேர் மாதந்தோறும் ஒருமுறை அல்லது இரு முறை குடிக்கின்றனர். 2 கோடியே 30 லட்சம் பேர் விஷேச நாட்கள், துக்க நாட்களில் மட்டும் குடிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 5329 Tasmac கடைகள் உள்ளன. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனையாகின்றது. ஒவ்வொரு மதுபயனாளிக்கும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 6500 ரூபாய் வரை நிரந்தர செலவாக உள்ளது.
ஒரு லிட்டர் 'A' grade மதுவின் மூலப்பொருளின் 65.61 ரூபாய். 'B 'grade மதுவின் மூலப்பொருளின் ஒரு லிட்டருக்கான விலை 60.73 ரூபாய். 'C 'grade மதுவிற்கான மூலப்பொருளின் ஒரு லிட்டருக்கான விலை-49.41 ரூபாய். தமிழ்நாட்டில் 'C grade மதுவகை தான் 80% பயன்படுத்தப்படுகிறது. 190 மி.லி., C grade மதுவின் மூல விலை ரூ. 9.40 மட்டுமே. அதே மது Tasmac கில் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதன்படி 120 - 9.40 =110.60 ரூபாய் ஒவ்வொரு பயனாளியிடம் இருந்து ஒரு பாட்டிலுக்கு லாபமாக பெறப்படுகின்றது. 110.60 ரூபாயில் (60% ) 66.36 ரூபாய் மது உற்பத்தியாளருக்கு லாபமாக கிடைக்கின்றது. (38%)42.02 ரூபாய் அரசுக்கு போய் சேர்கிறது. ( 2%) 2.21 ரூபாய் நிர்வாக செலவாக மாறி உள்ளது. மேலே குறிப்பிட்ட கணக்கீட்டில் மது உற்பத்தியாளருக்கு கொள்ளை லாபம் என்பது தெரிய வருகின்றது. இந்த மது உற்பத்தி ஆலைகள் யாவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் (மூலதன பங்கு)அரசியல் தலைவர்கள் வைத்து உள்ளார்கள். இவர்கள் தான் தேர்தலில் நிற்கின்றனர். வெற்றி பெறுகின்றனர்.
இவர்கள் தான் ஜனநாயகத்தை தன்வசப்படுத்துகிறார்கள். பல கோடிகளை செலவு செய்து தனது கட்சியை வெற்றிபெற வைப்பார்கள். இவர்களை பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது ? ஆளும்கட்சியாகட்டும் அல்லது ஆண்ட கட்சியாகட்டும் தேர்தலுக்கு சாராய முதலாளியை நம்பிக் கொண்டு ஜனநாயகத்தை கட்டிக்காத்து கொண்டிருப்பார்கள் ! ஆக மது கோப்பைக்குள் தமிழ்நாட்டின் ஜனநாயகம் தழைத்தோங்கி தனது ஆளுமையைச் செலுத்திக்கொண்டிருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu