இந்தியாவில் தமிழகம் தன்னிறைவுபெற்ற மாநிலமாக விளங்கி வருகிறது: உதயநிதி

இந்தியாவில் தமிழகம் தன்னிறைவுபெற்ற மாநிலமாக விளங்கி வருகிறது: உதயநிதி
X

புற்றுநோயினை கண்டறியும் அதி நவீன PET CT SCAN தொடக்கவிழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ,பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்.

கல்வி,சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைசார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் புதியகட்டட அடிக்கல் நாட்டுவிழா மற்றும் புற்றுநோயினை கண்டறியும் அதி நவீன PET CT SCAN தொடக்கவிழா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ,பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்தபுற்றுநோய் சிகிச்சைமையம் புதியகட்டடஅடிக்கல் நாட்டுவிழாமற்றும் புற்றுநோயினைகண்டறியும் அதிநவீன PET CT SCANமற்றும் பூதலூர் அரசுமருத்துவமனை யோகா மற்றும் இயற்கைமருத்துவபிரிவு புதிய கட்டிடம் திறப்புவிழா நடைபெற்றது.

கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்குமருத்துவமனை 18 மாதங்களில் கட்டதிட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், 15 மாதங்களில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. கல்வி,சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக நமதுஅரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதனால், இந்தியாவில் தமிழகம் தன்னிறைவுபெற்ற மாநிலமாக விளங்கிவருகிறது.

கொரோனாவை விரட்டியதற்கு முக்கியபங்கு தடுப்பூசிதான். நாட்டிலேயேதமிழகம் தான் அதிகளவில் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களில் முதன்மையாகவும், முன்மாதிரியான மாநிலமாக விளங்கியது. கொரோனா நேரத்தில் மக்கள் தேடிமருத்துவம் என்ற திட்டத்தை தமிழகஅரசு செயல்படுத்தியது. மக்களைதேடிமருத்துவம் திட்டத்தில் இதுவரை 1.60 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களைகாக்க இன்னுயிர் காப்போம்,நம்மைகாக்கும் 48 என்றதிட்டத்தைஉருவாக்கினோம். அதன் மூலம், 1.65 லட்சம் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். இதற்கு மருத்துவர்கள்,செவிலியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை உள்ளவர்களால் தான் சாத்தியமானது.

புற்றுநோய் என்பது குணப்படுத்த கூடிய ஒன்றுதான். அதனை உடனே கண்டறியவேண்டியது அவசியம்.எனவே,தான் புற்றுநோயை கண்டறியும் வகையில் 10 கோடிரூபாய் மதிப்பீட்டில் பெட் ஸ்கேன் கருவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதியபுற்று நோய் சிகிச்சை மையம் அமையப்படஉள்ளது. இக்கட்டிடம் ஒராண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்ததாவது:

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுதுறைஅமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைசார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 42 கோடிமதிப்பீட்டில் ஒருங்கிணைந்தபுற்றுநோய் சிகிச்சைமையம் புதியகட்டடஅடிக்கல் நாட்டுவிழா,ரூபாய் 10 கோடிமதிப்பீட்டில் புற்றுநோயினைகண்டறியும் அதிநவீன PET CT SCAN தொடக்கவிழாமற்றும் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பூதலூர் அரசுமருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு புதியகட்டிட திறப்பு விழாவினை தொடங்கி வைத்தார்.

மேலும் முதலமைச்சர் ஆணையின்படிரூ.40.80 கோடிமதிப்பீட்டில் 36 அறிவிப்புகளின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசுமருத்துவக் கல்லுரி மருத்துவமனை,அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டில் 7 அரசுமருத்துவமனைகளில் புற்றுநோயை கண்டறியும் ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 இடங்களில் இன்னும் 10 நாட்களில் செயல்பாட்டிற்கு வரும். தமிழ்நாட்டில் புற்றுநோயைதுல்லியமாககண்டறியும் அதிநவீன கருவியான பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் இரண்டுஅரசு மருத்துவமனைகளில் தான் இருந்தது. இதனைமேலும் 5 அரசுமருத்துவமனைகளில் அமைக்க வேண்டும் எனமுதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. 2-வதாக தஞ்சையில் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்தகருவி மூலம் ஒருபரிசோதனைக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். அரசு மருத்துவமனைகளில் காப்பீடுதிட்டத்தில் இலவசமாகவும், 11 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தியும் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

அடுத்தகட்டமாக சேலம்,கோவை,காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இன்னும் 10 நாட்களுக்குள் தொடங்கப்படும். இதன் மூலம் 7 இடங்களில் புற்றநோயை கண்டறியும் வசதி இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகஅளவில் தாக்கத்தைஏற்படுத்தும்.

தமிழகத்தில் 8 ஆயிரத்து 713 துணைசுகாதர நிலையங்கள் உள்ளன. இதில் 1,500 நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. 1,000 கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இடிந்து கிடக்கிறது. 2 ஆயிரத்து 686 ஆரம்பசுகாதார நிலையங்களில் 500 நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டியநிலை உள்ளது. ஆனால்,கடந்த 2 ஆண்டுகளில் 500 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் புற்றுநோய் சிகிச்சைமையத்தின் மூலம் ஆரம்ப நிலையிலயே புற்றுநோயைகண்டறிந்துகுணப்படுத்திடமுடியும் என்றார் அமைச்சர் மா. சுப்ரமணியன்..

பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறைஅமைச்சர் தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைசார்பில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 42 கோடிமதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புற்று நோய் சிகிச்சை மையம் புதியகட்டட அடிக்கல் நாட்டு விழா,ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புற்று நோயினை கண்டறியும் அதிநவீன PET CT SCANதொடக்கவிழாமற்றும் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பூதலூர் அரசுமருத்துவமனையோகாமற்றும் இயற்கை மருத்துவபிரிவு புதிய கட்டிடம் திறப்பு விழாவினை தொடங்கி வைத்தார்.PET CT SCAN புற்றுநோயின் ஆரம்பகட்டத்திலேயேகண்டறிவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது,

இந்தகருவியானதுபுற்றுநோயின் ஆரம்பக்கட்டத்தைகண்டறிவதில் வரப்பிரசாதம். புற்றுநோய் அல்லதுகட்டிகளால் பாதிக்கப்பட்டபகுதிகளைகண்டறிய,புற்றுநோய் சிகிச்சையின் செயல்திறன்,புற்றுநோய் மீண்டும் வருதல்,மத்தியநரம்பு மண்டலம் தொடர்புடைய வலிப்பு உட்பட கோளாறுகளை கண்டறிய உதவும்.PET CT SCAN இதயத்தில் குறைந்த இரத்த ஓட்டம் உள்ளபகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. இதயதொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை தேவையாஎன்பதை தீர்மானிக்கஉதவுகிறது.

தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளைஅறிந்து பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டுத் துறை, மருத்துவத்துறைபோன்ற அனைத்துதுறைகளிலும் ஏழைஎளியமக்கள் பயன்பெறும் அனைத்துவசதிகளும் செய்துகொண்டிருக்கிறார் என்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்றஉறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்,சட்டமன்றஉறுப்பினர்கள் ரு. துரைசந்திரசேகரன் (திருவையாறு), டி. கே. ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்),கா.அண்ணாதுரைஅவர்கள்(பட்டுக்கோட்டை), கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த் ,தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் .ராமநாதன் ,கும்பகோணம் மாநகராட்சி மேயர் க.சரவணன் ,மாவட்டஊராட்சிதலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி , தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் மரு.அஞ்சுகம் பூபதி,தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்ஆர் பாலாஜி நாதன் ,மருத்துவக் கண்காணிப்பாளர் ச. இராமசாமி ,மருத்துவபணிகள் இணை இயக்குனர் திலகம் ,துணை இயக்குனர் பா.கலைவாணி மற்றும் அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு