சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது
மாநில சுற்றுலாத் துறையுடன் இணைந்து குளோபல் மீடியா பாக்ஸ் நடத்தும் முதல் தமிழ்நாடு சர்வதேச காற்றாடி விழா (TNIKF) ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்சிக் கழகம் Ocean View என்ற இடத்தில் நடைபெறும் இந்த மெகா நிகழ்வை சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் மற்றும் சிறு குறு மற்றும் குறுந்தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர் .
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், இந்தியா மட்டுமின்றி தாய்லாந்து, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில்முறை காற்றாடி விடும் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இவ்விழாவில் பங்கேற்கும் 10 அணிகளில் 6 அணிகள் இந்தியாவில் இருந்தும் 4 அணிகள் பிற நாடுகளில் இருந்தும் இடம் பெற்றுள்ளன.
இந்நிகழ்வு மதியம் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும். திருவிழாவில் உணவுக் கடைகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெறும்.
இந்த திருவிழாவில் பறக்க விடப்படும் காற்றாடிகள், ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்கள் போன்றவை. அவை தரையில் கயிற்றால் கட்டப்படும். இந்த பலூன்கள் அதிகபட்சமாக 25 அடி உயரம் வரை பறக்கும் என்பதால் பறவைகளுக்கு முற்றிலும் அச்சுறுத்தல் இல்லை
இத்தகைய சர்வதேச போட்டிகளால், மாமல்லபுரம் சுற்றுலா பகுதியாக மட்டுமின்றி, சர்வதேச நிகழ்விடமாக வெளிநாடுகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் கவர்ந்துள்ளது. சர்வதேச பீச் வாலிபால் போட்டி உட்பட பல போட்டிகள், அடுத்து நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா மேம்பாடு அடைவதோடு, பொருளாதாரமும் வளர்ச்சியடையும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu