தமிழக நெடுஞ்சாலைத்துறை ரொம்பவே ‘பிஸி’..!

தமிழக நெடுஞ்சாலைத்துறை  ரொம்பவே ‘பிஸி’..!
X

சாலைப்பணிகள் (கோப்பு படம்)

தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை முதல்முறையாக மேற்கொண்டு வருகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைக் கழகம், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதால் ஏற்பட்டிருக்கும் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் தமிழகத்தில் மிக முக்கிய நான்கு வழிச் சாலைத் திட்டங்களை மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றிக் கொடுத்துள்ளது. மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை, இதுபோன்ற பல கோடி மதிப்புள்ள திட்டங்களை கையாள்வது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, ராமநாதபுரம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி வழித்தடம், கோவை - சத்தியமங்கலம் வழித்தடத்தில் இரண்டு வழித்தடங்கள் சத்தியமங்கலம் - கர்நாடக எல்லை வழி விரிவுபடுத்தப்படுகிறது. கூடுதலாக பல பைபாஸ் திட்டங்களும் மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களை நெடுஞ்சாலைத்துறை சிறப்பாக முடித்தால், அடுத்தடுத்து நான்கு வழிச்சாலை திட்டங்களை நெடுஞ்சாலைத்துறையிடமே ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலை உருவானால் தமிழகத்தின் சாலைகள் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் உயரும். தற்போதைய நிலையில் இந்திய அளவில ்தமிழகத்தில் தான் சாலை வசதிகள் அதிகம் உள்ளது. இப்போது உருவாகி உள்ள புதிய சூழல் மேலும் ரோடு வசதிகள் உருவாக அடிப்படையாக அமையும்.

Tags

Next Story