நாட்டிலேயே அதிகளவு மின்சாரம் பயன்பாட்டில் தமிழ்நாடு முதலிடம்

நாட்டிலேயே அதிகளவு மின்சாரம் பயன்பாட்டில் தமிழ்நாடு முதலிடம்
X

பைல் படம்

இந்திய அளவில் அதிக மின்சாரம் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் சமிக் பத்தாச்சாரியா எழுத்துப் பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாடு, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களில் மட்டுமே நகர்ப்புறங்களுக்கு 24 மணி நேர சராசரி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த மூன்று மாநிலங்களில் கிராமப்புறங்களில் சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்கி மாநிலம் எது என பார்த்தால், அதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் கிராமப்புறங்களுக்கு 23.5 மணி நேரமும், தெலுங்கானாவில் 21.9 மணி நேரமும், தலைநகர் டெல்லியில் கிராமப்புறங்களுக்கு வழங்கப்பட்ட சராசரி நேரம் குறித்த தரவுகள் இல்லை என்பதும் மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டிலே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த நிதியாண்டில் கிராமப்புறங்களுக்கு சராசரியாக 18.1 மணி நேர மின்சாரமும், நகர்ப்புறங்களில் 23.4 மணி நேரம் மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!