தொழில் செய்வோருக்கு குறைந்த வட்டியில் தமிழக அரசு கடன்..! இன்னும் நீங்க வாங்கலியா..?

தொழில் செய்வோருக்கு குறைந்த வட்டியில் தமிழக அரசு கடன்..! இன்னும் நீங்க வாங்கலியா..?
X

சிறுதொழில் செய்வோர்-கோப்பு படம் 

கலைஞர் கடன் உதவி திட்டத்தில் குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை தமிழக அரசு கடன் தருகிறது. நீங்களும் அதை பயன்படுத்தலாமே.

தமிழக அரசின் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்று சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்ச்சி அடைய பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டில் தொழில் வளம் பெருகவேண்டும் என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தொழில் முனைவோருக்கு பல உதவிகளை செய்து வருகிறது. அந்த வரிசையில் தமிழக அரசு தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் குறிப்பாக சிறு, குறு தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை போக்கும்விதமாக தமிழக அரசு கடன் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

அந்த திட்டத்தின்படி சிறு குறு தொழில் முனைவோருக்கு இருக்கும் நிதிச் சுமையை போக்கும்விதமாக ரூ.20 லட்சம் வரை கடன் வழங்க உள்ளது. பல சிறு குறு நிறுவனங்கள் நிதி சுமையை தாங்க முடியாமலே பாதிப்பை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக அரசு இந்த கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

கடனை எங்கு பெற முடியும்?

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தாய்கோ வங்கியின் அனைத்து கிளைகளிலும் இந்த கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம். அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது.

கடனை பெறுவது எப்படி?

சிறு, குறு, உற்பத்தி நிறுவனங்கள் 7 சதவீத வட்டி விகிதத்தில் இத்திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இத்திட்டத்தில் அசையா சொத்துகளை அடமானமாக வைக்க வேண்டும்.

கடன் பெறுவதற்கான தகுதி

கடன் பெறும் விண்ணப்பதாரர் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். தொழில் முனைவோர் 600 புள்ளிகள் இருக்க வேண்டும். அதற்கு குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் கடன் பெறும் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு முந்தைய 2 நிதி ஆண்டுகள் லாபத்தில் இயங்கி இருக்கவேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு நடப்பு நிதியாண்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!