சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
X

பைல் படம்.

இன்று பிறந்தநாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஏராளமான ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!