திமுகவிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் அறிவிப்பு
சுப்புலட்சுமி ஜெகதீசன்.
Subbulakshmi Jagadeesan -திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக நேற்று தகவல் பரவியது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், சுப்புலட்சமி தனது பதவியிலிருந்து விலகியதாக நேற்று வெளியான தகவல்களை அவர் மறுத்தார்.
இந்நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தான் கட்சியிலிருந்து விலகுவதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் விலகல் கடிதம் அளித்துள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற விருப்பத்தினால் ஆகஸ்ட் 29ம் தேதி அன்றே திமுகவில் இருந்து விலகிவிட்டேன்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் நாடே பாராட்டும் வகையில் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். சுப்புலட்சுமி ஜெகதீசனின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் அந்த இடம் காலியாகும். அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக துணை பொதுச் செயலாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu