ஓ.பி.எஸ்.,க்கு தேனி மாவட்டத்திலேயே வலுவான 'செக்' வைக்கிறார் இ.பி.எஸ்.
இ.பி.எஸ், ஓ.பி.எஸ். பைல் படம்.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்ற குரல் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. இந்த ஒற்றைத்தலைமையை ஓ.பி.எஸ்., தான் ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் தொடங்கி வருகின்றனர். இதற்கு இதுவரை இ.பி.எஸ்., தரப்பில் இருந்து பதில் தாக்குதல் நடத்தப்படவில்லை. மாறாக இ.பி.எஸ்., அணியினர் திரைமறைவு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய இ.பி.எஸ்., இம்முறை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.,க்கு வலுவான செக் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர் பிரச்சினை செய்து விட்டு சமரசத்திற்கு வருவதை ஏற்க முடியாது என திடமாக முடிவு எடுத்துள்ளார்.
அ.தி.மு.க.,வில் தனது தலைமையில் ஒற்றைத்தலைமை இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ள இ.பி.எஸ்., அதற்கேற்ற பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். ஓ.பி.எஸ்.,க்கு அவரது தேனி மாவட்டத்திலேயே மிகுந்த நெருக்கடி கொடுத்து செக் வைக்க ஒரு வி.ஐ.பி.,யை தேர்வு செய்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் பெங்களூருவில் சுமூமாக முடிந்து விட்டன.விரைவில் அந்த வி.ஐ.பி., யாரென தெரியவரும். அவர் தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தி, ஓ.பி.எஸ்.,க்கு வலுவான அரணாக திகழ்வார். இவரை சமாளிக்கவே ஓ.பி.எஸ்.,க்கு போதும், போதும் என்றாகி விடும் என அ.தி.மு.க.,வினரே கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu