குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்

குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன்
X
குழந்தை திருமணம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கீதா ஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்களை தடுப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் சம்புகல்லோலிக்கர், சமூகநல ஆணையர் ஆப்ரஹாம், சமூக பாதுகாப்புதுறை ஆணையர் லால்வானா, காவல்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் 32 மாவட்டங்களை சேர்ந்த சமூகநல அலுவலர்கள் பங்கேற்றனர்..

இக்கூட்டத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குழந்தை திருமண தடைச் சட்டம் 2006-ன்படி குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என்றும், இந்த குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், ஊக்குவிப்பவர்கள் மற்றும் கலந்து கொள்பவர்களின் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களின் மூலம் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க தொடர் கண்காணிப்பிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மீறி நடத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையினை மாவட்ட சமூகநல அலுவலர் மூலம் எடுக்க அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் மற்றும் சைல்டு லைன்-1098 அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!