ஸ்டெர்லைட் கலவரம் : இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

ஸ்டெர்லைட் கலவரம் : இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு
X

ஸ்டெர்லைட் கலவரம் குறித்த இடைக்கால அறிக்கையை விசாரணை ஆணையத்தின் தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம்  சமர்ப்பித்தார். 

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன்-

ஸ்டெர்லைட் கலவரம் குறித்த இடைக்கால அறிக்கையை விசாரணை ஆணையத்தின் தலைவர் தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்தார்.

கடந்த 22. 5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பொதுமக்கள் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரிப்பதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டார். இன்று அவர் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து தலைமைச் செயலகத்தில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார்

அப்போது முதல்வர் உடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உடனிருந்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!