ஆதிதிராவிட பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு நடைமுறை..!
ஆதி திராவிடர் நலப்பள்ளி (கோப்பு படம் )
சென்னை, ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்நிலை பணியில் சிறப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த திருத்தத்தின் அடிப்படையில் அத்துறை சார்ந்த பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளை ஒரே அலகின்கீழ் கொண்டுவருமாறு அரசுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் கருத்துரு அனுப்பி இருந்தார்.
அந்த கருத்துருவை ஏற்றுக்கொண்டுள்ள ஆதி திராவிடர் நலத்துறை, அந்தத் துறையின் சார்நிலை பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜி.லட்சுமி பிரியா அரசாணையாக வெளியிட்டுள்ளார்.
அந்த அரசாணையில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழ் புலவர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் போன்ற பதவிகள் ஒரே அலகின்கீழ் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட பதவிகளுக்கு பணிநியமன நாள் அடிப்படையில் மாநில அளவிலான பணிமூப்பு (சீனியாரிட்டி) தயாரிக்குமாறு ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனருக்கும் அரசு ஆணையில் அறிவுறுத்தப்பட்டுளளது.
இதன்மூலமாக அந்த துறையில் பணிபுரியும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு மாநில அளவிலான பணிமூப்பு அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu