சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை
சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் செல்லும் போது நெய், தேங்காய் அடங்கிய இருமுடி பைகளை கொண்டு செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. விமானத்தில் இருமுடி பைகளை கொண்டு செல்ல 2025 ஜன.20-ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்ரே, இடிடி மூலம் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பக்தர்கள் இருமுடியை விமானத்தில் எடுத்து செல்ல முடியும்.
கேரளத்தில் உள்ள சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனா். அவா்கள் இருமுடி கட்டிக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இந்த நிலையில், விமானங்களில் பயணிக்கும் சபரிமலை பக்தா்களின் இருமுடியை தங்களுடன் கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பாதுகாப்பு விதிமுறைகளில் குறுகிய காலத்துக்கு தளா்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு அனுமதிக்கும் போது, எக்ஸ்-ரே, இடிடி (வெடிபொருள்கள் அடையாளம் காணும் கருவி) ஆகியவற்றின் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பக்தா்கள் இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவா். சபரிமலை சீசன் நிறைவடையும் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரை இந்த சிறப்பு அனுமதி நடைமுறையில் இருக்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu