smart card download-'ஸ்மார்ட் ரேஷன்கார்டை' டவுன்லோட் செய்வது எப்படி..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

smart card download-பொதுவிநியோகத்திட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்ட் (மாதிரி படம்)
smart card download-ஸ்மார்ட் ரேஷன் கார்டு வருவதற்கு முன் காகித அட்டை வடிவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போது அனைவருக்கும் மின்னணு வடிவிலான ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இது கொண்டு செல்வதற்கு எளிதாகவும், போலி அட்டைகளை ஒழிக்கவும் பயனுள்ளதாக இருப்பதால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசு tnpds.gov.in என்ற உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளம் மூலம் ரேஷன் அட்டை தொடர்புடைய பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் பெற முடியும்.
பின்வரும் சேவைகளை இணையதளம் மூலம் பெறலாம்.
Apply New Ration Card
Ration Card Application Status
Reprint Smart Card
Reprint Smart Card Status
Add Family Member
Change of Address
Family Head Member Change
Remove Family Member
இந்த இணையதளத்தில் உங்களின் ரேஷன் கணக்கை பயன்படுத்த Login , Username, Password போன்றவை தேவையில்லை. அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பர் இருந்தாலே போதுமானது. நீங்கள் Login செய்யும்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். அந்த OTP Number -ஐ உள்ளிட்டு அதை 'கிளிக்' செய்தாலே ஓபன் ஆகிவிடும்.
TNPDS Ration Card க்கு மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. Google Playstore இல் TNePDS Mobile App-ஐ Download செய்து அந்த செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலியில் Register செய்த Mobile Number-ஐ உள்ளிட்டு 'கிளிக்' செய்தால் OTP வரும். அந்த OTP Number-ஐ பதிவிட்டு செய்து 'கிளிக்' செய்தால் Open ஆகிவிடும்.
NPDS Mobile App இல் பின்வரும் சேவைகளை பெறலாம்
Smart Ration Card Activation
Transactions
Entitlement
Profile Details
FPS Stocks
Feedback
Give it Up
அதாவது மேலே குறிப்பிடபட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் அட்டை செயலில் உள்ளதா, ரேஷன் கடைகளில் உள்ள உணவுப்பொருட்களின் இருப்பு, உங்களுக்கு வழங்க வேண்டிய பொருள்களின் அளவு, பரிவர்த்தனை தகவல்கள், அட்டை பற்றிய விவரங்கள் போன்றவற்றை மொபைல் செயலி மூலம் பார்க்க முடியும்.
TNPDS ரேஷன் அட்டையை Online மூலம் பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான செயல்முறைகள் பின்வருமாறு:
Step 1: முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: இதில் வலது பக்க ஓரத்தில் English மற்றும் Tamil என்ற இரண்டு மொழிகளில் நமக்கு வேண்டிய மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
Step 3: முதலில் Citizen Login என்பதை 'கிளிக்' செய்யவும்.
Step 4: நமது Smart Ration Card -ல் [அதிவு செய்துள்ள Mobile Number-ஐ Type செய்து, அதற்கு கீழே உள்ள Captcha வை பதிவிட்டு Submit கொடுங்கள்.
Step 5: இப்பொழுது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு 7 இலக்க OTP Number வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு Submit என்பதை 'கிளிக்' செய்யவும்.
Step 6: தற்போது உங்களின் ஸ்மார்ட் கார்டு குறித்த அனைத்து தகவல்களும் விரியும். அதில் கீழே உள்ள Smart Card PDF Download என்பதை அழுத்தவும்.
Step 7: அதை அழுத்தியவுடன் ஒரு PDF File Download ஆகும். அதை Open செய்து பார்க்கும்போது மின்னணு அட்டை குறித்த அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த TNPDS Smart Card PDF - ஐ பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu