தமிழ்நாடு குறித்து வடமாநில சமூக வலைதளங்களில் அபாண்டம்
வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில் ஒரு காட்சி
தமிழகத்தில் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழக தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தமிழக தொழிலாளர்கள் தான் தாக்குதலுக்கு உள்ளாகினர். இருப்பினும் வடமாநில தொழிலாளர்களை இவர்கள் திருப்பி அடிக்க வேண்டாம் என காவல்துறையினர் தடுத்து விட்டனர். பிரச்னை சில மணி நேரங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு குறித்து மிகவும் மோசமான சிந்தனை உருவாகும் வகையில் மாநிலங்களில் உள்ள சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அதில் பீகாரை சேர்ந்த வாலிபர்கள் 15 பேர் தமிழகத்தில் இந்தி மொழி பேசிய குற்றத்திற்காக தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
வட இந்தியாவில் சமூக வலைதளங்களில் வெளியான இந்த தகவல்களை விசாரிக்காமல் தைனிக் பாஸ்கர், ஹிந்துஸ்தான் போன்ற நாளிதழ்களும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த செய்தியை பரப்பியவர்களி்ல பலர் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டதை கடுமையாக விமரிசித்துள்ளன. ஒரு முன்னாள் எம்.பி., கூட இந்த செய்திகளை பகிர்ந்திருந்தார். பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஒரு படி மேலே போய் தனது டூவீட்டில் கவலையை வெளிப்படுத்தி இருந்தார்.
தமிழ்நாட்டிற்கு வரும் வடஇந்திய தொழிலாளர்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே இந்த தகவல் பரப்பப்பட்டுள்ளது. இதனை பரப்பியவர்கள் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஆட்சியர் இந்தியில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த செய்தி தவறு. வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனர். அவர்கள் வெளியேறி வருகின்றனர் என்ற தகவல் தவறானது’ என தெரிவித்துள்ளார்.
திருச்சியில் காவலர்களுக்கான தடகளப்போட்டியை தொடங்கி வைத்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, ‘தமிழத்தில் ஜாதிச்சண்டை, மதக்கலவரம் உள்ளிட்ட எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னையும் இல்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை சிறப்பாக உள்ளது’ என தெரிவித்திருந்தார்.
மாநில காவல்துறைநிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு ஆபத்து என்ற தவறான தகவல் பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அவர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்புடன் பணிபுரிகின்றனர் என உறுதி பட தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu