சிவகங்கையில் மகளிர் உரிமைத் தொகை:அமைச்சர் பெரியகருப்பன் வழங்கல்

சிவகங்கையில் மகளிர் உரிமைத் தொகை:அமைச்சர் பெரியகருப்பன்  வழங்கல்
X

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தனியார் மஹாலில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாங்குடி(காரைக்குடி) தமிழரசிரவிக்குமார்(மானாமதுரை) ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் தொடக்கி வைத்தார்

கடந்த 2021-ல் சட்டப்பேரவை தேர்தலி ன் போது பொதுமக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில் 85 % நிறைவேற் றப்பட்டுள்ளன

தமிழ்நாடு முதலமைச்சரால், தொடங்கி வைக்கப்பட்டுள்ள,“கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்”

தொடக்க விழாவினை, முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் நிகழ்வினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட தனியார் மஹாலில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.மாங்குடி (காரைக்குடி), தமிழரசிரவிக்குமார்(மானாமதுரை) ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் தொடக்கி வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் நலன் கருதி தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2021-ல் சட்டப்பேரவை தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த 505 வாக்குறுதியினை நிறைவேற்றி டும் பொருட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் 85 சதவீதம் வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டு, சொன்னதை செய்யும் முதலமைச்சராகவும் சொல்லாத பல புதிய திட்டங்களையும் அறிவித்து சொல்லாததை செய்யும் முதலமைச்சராகவும், தமிழ்நாடு முதலமைச்சர் விளங்கி வருகிறார்கள்.

அதில், பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றத்தினை மேம்படுத்திடும் பொருட்டும், சமூகத்தில் ஆணுக்கு நிகராக பெண்கள் திகழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்குடனும் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

அந்த வகையில், பெண்கள் உயர்கல்வி கற்று பயன்பெற வேண்டும் என்ற சமூக சிந்தனையுடன் புதுமைப்பெண் என்ற திட்டத்தை அறிவித்து மாதந்தோறும் உதவித் தொகைகள் மாணவியர்களுக்கு தற்போது, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை தமிழகம் முழுவதும் செயல்படுத்திடும் பொருட்டு 1 கோடியே 65 இலட்சம் குடும்ப தலைவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், தகுதியுடைய 10650000 குடும்ப தலைவிகளுக்கு முதற்கட்டமாக மாதம் ரூ.1000-வழங்கும் நிகழ்வினை, தமிழ்நாடு முதலமைச்சர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொடங்கி வைத்துள்ளார்கள். அந்நிகழ்ச்சியின் மூலம் நேரலை காட்சியின் வாயிலாக , தமிழ்நாடு முதலமைச்சர் தங்களிடையே இத்திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

அதனைத்தொடர்ந்து, நமது சிவகங்கை மாவட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் நிகழ்வும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு அரசால் சில வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டு, அதில், ஒரு குடும்ப பெண் தலைவிக்கு 21 வயது நிரம்பி இருத்தல், செப்டம்பர் 15 2002-க்கு முன்னதாக பிறந்தவர்களாக இருத்தல் போன்ற தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறும் பொருட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலை கடைகளில் அமைக்கப்பட்டிருந்த விண்ணப்பபதிவு முகாமின் மூலம் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே என்ற அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அதனடிப்படையில் , சிவகங்கை மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்களின் மூலம் திருப்பத்தூர் வட்டத்தில் 36974 விண்ணப்பங்களும், மானாமதுரை வட்டத்தில் 23330 விண்ணப்பங்களும், திருப்புவனம் வட்டத்தில் 28393 விண்ணப்பங்களும், காரைக்குடி வட்டத்தில் 66016 விண்ணப்பங்களும், தேவகோட்டை வட்டத்தில் 38668 விண்ணப்பங்களும், இளையான்குடி வட்டத்தில் 27320 விண்ணப்பங்களும் காளையார்கோவில் வட்டத்தில் 25264 விண்ணப்பங்களும், சிங்கம்புணரி வட்டத்தில் 32809 விண்ணப்பங்களும் சிவகங்கை வட்டத்தில் 48297 விண்ணப்பங் களும் என, மொத்தம் 327071 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும்,அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவுத் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டுதிட்ட விதிகளைப் பூர்த்தி செய்த மகளிர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அரசாணையில் குறிப்பிட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களில் முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு செப்டம்பர் 18 முதல் அனுப்பப்படும்.

இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதார்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சி யருக்கு மேல்முறையீட்டு நடைமுறைகளை இணையதளம் வழியாக செய்து கொள்ளலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

மேலும் , இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் பணம் செலுத்துவதற்கென பத்திற்கும் மேற்பட்ட வங்கிகள் மேற்கொண்ட பணிகளில் 99மூ பணிகளை கூட்டுறவுத்துறையின் சார்பில் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டுள்ளது என்று , தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது பெருமைக்குரிய ஒன்றாகும்.

குறிப்பாக, தற்போது தொலைபேசி வாயிலாக போலியான நபர்கள் தங்களின் வங்கி கணக்கு தொடர்பாகவும் குறுஞ்செய்தி குறித்தும் பொதுமக்களிடையே கேட்கப்பட்டு மோசடியில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்தவையே. அரசின் சார்பில் எந்த ஒரு எப்போதும் கேட்கப்ப டமாட்டாது. இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.

மேலும், ஒரு சில நாடுகள் மற்றும் ஒரு சில மாநிலங்களில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், தமிழகத்தில் மகளிர்களுக்கு உதவித்தொகையாக அல்லாமல் உரிமைத்தொகையாக அவர்களுக்கு வழங்கப்படுவது சிறப்புக்குரியதாகும்.

பெண்களின் முன்னேற்றத்திற்கென தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என , கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, காரைக்குடி நகர் மன்றத்தலைவர் சே.முத்துத்துரை, துணைத் தலைவர் ந.குணசேகரன், பேரூராட்சி தலைவர்கள் சேங்கைமாறன் (திருப்புவனம்), ராதிகா (கானாடுகாத்தான்), சாந்தி (பள்ளத்தூர்), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், பொது மேலாளர் (சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி), மாரிச்சாமி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், வட்டாட்சியர்கள் தங்கமணி (காரைக்குடி), வெங்கடேசன் (திருப்பத்தூர்) மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் 2000த்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!