சிவகங்கை அருகே மக்கள் தொடர்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சிவகங்கை அருகே மக்கள் தொடர்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
X

பயனாளிகளுக்கு நலத்தி்ட்ட உதவிகளை சிவகங்கை மாவட்ட வருவாய் அதிகாரி  மோகன சந்திரன் வழங்கினார்.

சிவகங்கை அருகே மக்கள் தொடர்பு முகாமில் 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அதிகாரி மோகன சந்திரன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட கொடுவூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பல்வேறு துறைகளின் சார்பில்,மொத்தம் 56 பயனாளிகளுக்கு ரூ.4.35 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் , கண்ணங்குடி உள்வட்டம் சிறுகானூர் கிராமம் கொடுவூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில், பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற அடிப்படையில், சிறப்பான நிர்வாகத்தினை தமிழகத்தில் ஏற்படுத்தி, அனைத்து தரப்பு மக்களையும் பயன்பெற செய்து வருகிறார்கள்.

அதன்படி, பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கிடும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றையதினம் கொடுவூர் ஊராட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

இம்மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்குரிய, நலத்திட்ட உதவிகளும் அதன் பயன்களும் இம்முகாமின் வாயிலாக வழங்கப்படவுள்ளன. மேலும், இம்மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு துறைகள் ரீதியாக செயல்விளக்க கண்காட்சி அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன காலகட்டத்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். அதில், குறிப்பாக அரசின் அனைத்து திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கு ஏதுவாக, அதற்குரிய இணையதளம் குறித்து முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதில் தங்களுக்கு பயனுள்ள வகையிலான திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கலாம். மேலும், அவ்விண்ணப்பங்கள் தொடர்பான நிலையினை இணையதளத்தின் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம்.

இவ்வூராட்சியை பொறுத்த வரையில் 2021-2022, 2022-2023, மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டுகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 17 வளர்ச்சிப் பணிகள் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் தற்சமயம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழும் பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்புடன் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தலாம். இதுபோன்று, இப்பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ள பல்வேறு கூடுதல் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு அத்திட்டங்களின் கீழ் பயன்பெற்று, தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4500மதிப்பீட்டிலான உதவித் தொகைக்கான ஆணைகளையும், 15 பயனாளிகளுக்கு ரூ.150000மதிப்பீட்டிலான இணையவழிப் பட்டாக்கான ஆணைகளையும், 15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலு (முழுப்புலம்) க்கான ஆணைகளையும், ஒரு பயனாளிக்கு பட்டா மாறுதல் (உட்பிரிவு) க்கான ஆணையும், 9 பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழ்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில் , 5 பயனாளிகளுக்கு ரூ.4790மதிப்பீட்டிலான இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.26140மதிப்பீட்டிலான பழவகை கன்றுகளையும், ஊரக வளர்ச்சித் துறை மகளிர் திட்டத்தின் சார்பில் தலா ரூ.50000 மதிப்பீட்டில் 05 பயனாளிகளுக்கு மாடு வளர்ப்பிற்கான ஆணைகளையும் என , ஆக மொத்தம் 56 பயனாளிகளுக்கு ரூ.435430மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வமோகனச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சரவண மெய்யப்பன், ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத்தலைவர் சந்திரபோஸ், கொடுவூர் ஊராட்சி மன்றத்தலைவர் எம்.பூரணம், தேவகோட்டை வட்டாட்சியர் அசோக்குமார் மற்றும் அனைத்து துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....