அரசு பணியை துறந்து உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளர்

அரசு பணியை துறந்து உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கிய வேட்பாளர்
X

அரசு பணியை உதறி உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய வேட்பாளர் கவிதா 

மக்கள் சேவை செய்ய அரசு பணியை துறந்து நகர்புறஉள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக பெண் வேட்பாளர் களமிறங்கியுள்ளார்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வசித்து வருபவர் கவிதா. இவரது கணவர் குமார். கவிதா நெற்குப்பை அருகே புரந்தன்பட்டி அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கவிதா தனது பகுதியில் உள்ள பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கோடு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திருப்பத்தூர் பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனு செய்துள்ளார்.

மனு பரிசீலனையில் கவிதா முறைப்படி உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பணிக்காக அரசுப் பணியை உதறிய கவிதாவின் வெற்றி வாய்ப்பு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்