சிவகங்கை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி

சிவகங்கை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி
X

சிவகங்கைபெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மணிவண்ணன்  தலைமையில், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Verification of electronic voting machines in Sivagangai

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகளை பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும் பணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொறுப்பு ப. மணிவண்ணன் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியினை சரிபார்த்து, பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும் பணிமாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மணிவண்ணன் தலைமையில், அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம், சிவகங்கை மாவட்டத்தில்உள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒன்றான (ஆ.3 வகை) வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியினை கருவியினை சரிபார்த்து, பெங்களுரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்திட உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், 1,288 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியும், 17 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 49 கட்டுப்பாட் டுக்கருவிகள் என மொத்தம் 1,354 இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. பணிகள் முடிவுற்றவுடன் பெங்களுரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இப்பணியானது, கட்டுப்பாட்டுக்கருவிகள் ஏற்கெனவே ,சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மணிவண்ணன்தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கே.சுகிதா, வட்டாட்சியர்கள் ப.தங்கமணி, ச.ராஜா உட்பட பல்வேறு அரசியல் கட்சிப்பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story