சிவகங்கை மாவட்டத்தில் வள்ளலார் முப்பெரும் விழா: அமைச்சர் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் வள்ளலார் முப்பெரும் விழா: அமைச்சர் பங்கேற்பு
X

 சிவகங்கை நகரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற தனிப்பெரும் கருணை வள்ளலார் 200-வது முப்பெரும் விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர்

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனிப்பெரும் கருணை வள்ளலார் 200-வது முப்பெரும் விழா நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிப்பின்படி, சிவகங்கை நகரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற தனிப்பெரும் கருணை வள்ளலார் 200-வது முப்பெரும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று , பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற 45 மாணாக்கர்களுக்கு சான்றிதழ் மற்றும் வள்ளலாரின் போதனைகள் அடங்கிய நூல்களை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், சட்டமன்றப் பேரவை அறிவிப்பின்படி, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் வள்ளலார் 200-வது முப்பெரும் விழா சிவகங்கை மாவட்டத்தில் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வள்ளலார் அவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவதரித்து சீறிய சிந்தனையுடனும் தனது இலட்சியத்துடனும் வாழ்ந்து காட்டியவர் அவர்.

மேலும், சாதி மதத்தினை அறவே ஒழித்திடும் வகையிலும் சமதர்ம சமுதாயத்தை உருவாக்கிடும் நோக்கிலும் முற்போக்கு சிந்தனையாளராக திகழ்ந்தவராவர். குறிப்பாக தர்மசால தொங்கி 156–வது ஆண்டு தொடக்கமும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டுகளுக்கான நிகழ்வுகள் இன்றைய தினம் தொடங்கப்பட்டது. இது மூன்றையும் இணைந்து முப்பெரும் விழாவாக நடைபெற்று கொண்டிருக்கிறது

வள்ளலாரின் சன்மார்க்கக் கொள்கைகளை மக்கள் மனத்தில் பதிக்கும் வகையில் அகவல் பாராயணம், திருவருட்பா தேன்முது ஆகிய நிகழ்ச்சிகளும் மற்றும் வள்ளலாரின் மாண்பினை எடுத்துரைக்கும் வகையிலான நல் அறிஞர்களின் சிறப்புச் சொற்பொழிவுகள் இன்னிசை அருட்பா ஆகியவற்றுடன் பல்சுவை நிகழ்ச்சிகளான இசையில் பரதநாட்டியம் மற்றும் வில்லுப்பாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில், வள்ளலாரின் கொள்கைகளை வலியுறுத்தும் தலைப்புகளிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ,பாட்டுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டி மன்னர் மேல் நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் ,பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மொத்தம் 177 கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் பங்குபெற்ற 6 முதல் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் வெற்றி பெற்ற மொத்தம் 45 மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வள்ளவாரின் போதனைகள் அடங்கிய நூல்கள் வழங்கப்படவுள்ளது. வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மூத்த சன்மார்க்கிகள் 12 நபர்களுக்கு வெள்ளி டாலர்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்கவர்களை கௌரவிக்கும் விதமாகவும், எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் பொருட்டும், தமிழ்நாடு முதலமைச்சர், தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார் உதவி ஆணையர் செல்வராஜ், காஞ்சிரங்கால் ஊரட்சி மன்ற தலைவர் மணிமுத்து அரசு அலுவலர்கள் மற்றும் சன்மார்க்க பெரியோர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவின் ஒருபகுதியாக பள்ளி மாணாக்கர்கள் மற்றும் சன்மார்க்கிகளைக் கொண்ட சன்மார்க்க பேரணியானது சிவகங்கை பேருந்து நிலையத்தில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் தொடங்கி காந்தி வீதி, திருப்பத்தூர் சாலை மற்றும் நகரின் முக்கிய வீதியாக சென்று மண்பத்தில் நிறைவடைந்தது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!