சிவகங்கை அருகே புகைப்படக் கண்காட்சி

சிவகங்கை அருகே புகைப்படக் கண்காட்சி
X

அரளிக்கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

சிங்கம்புணரி ஒன்றியம், அரளிக்கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், அரளிக்கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், அரளிக்கோட்டை ஊராட்சியில் (28.06.2023) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில், நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றன. மேலும், இக்கண்காட்சியில், அரசு திட்டங்கள் குறித்தும், நலத்திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அலுவலர்களால் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், நலத்திட்ட உதவிகளை யாரை அணுகிப் பெறவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வதற்கும் வசதியாக இப்புகைப்படக் கண்காட்சி பெரிதும் உதவியாக இருந்தது என பொதுமக்கள் பாராட்டினர். இப்புகைப்படக் கண்காட்சியினை, அமைக்கும் பணியை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!