சிவகங்கை, திருப்பத்தூர் தொகுதியில் திமுக வெற்றி

சிவகங்கை,  திருப்பத்தூர்  தொகுதியில்  திமுக வெற்றி
X
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் 4வது முறையாக வெற்றி பெற்றார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் 35,440 வாக்கு வித்தியாசத்தில் 4வது முறையாக வெற்றி பெற்றார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி வேட்பாளராக கே.ஆர்.பெரியகருப்பன், அதிமுக கட்சி வேட்பாளராக மருது அழகுராஜா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சி சார்பில் உமாதேவன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி வேட்பாளர் உள்ளிட்ட சுயேச்சை உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் 30சுற்றுகள் நடைபெற்றன இதில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜா 63,340 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் 98,780 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜாவைவிட 35,440 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரிய கருப்பன் வெற்றி பெற்றதாக திருப்பத்தூர் சட்டமன்ற தேர்தல் அலுவலர் சிந்து அறிவித்து சான்றிதழை வழங்கினார். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 4வது முறையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்