தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்

தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்
X

 கல்லல் - பரமக்குடி மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே சடலத்தை வைத்து,உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இறப்பிற்கு கல்லலை சேர்ந்த சிலர் காரணம் எனவும்அவர்களை கைது செய்ய வலியுறுத்தி , கல்லல் - பரமக்குடி சாலையில் மறியல் நடந்தது

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சடலத்தை சாலையில் குறுக்கே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த கல்லலை சேர்ந்தவர் நாச்சியப்பன்.பிரபல பேக்கரி நிறுவனத்தின் உரிமையாளரான இவர், இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடற்கூராய்வுக்குப்பின் சொந்த ஊரான கல்லலுக்கு உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், நாச்சியப்பனின் இறப்பிற்கு காரணம் கல்லலை சேர்ந்த சிலர் எனவும்,அவர்களை கைது செய்தால்தான் உடலை பெற்றுக் கொள்வோம் எனக் கூறி, கல்லல் - பரமக்குடி மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே சடலத்தை வைத்து,உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!