காளையார்கோயில் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
பைல் படம்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காளையார்கோவில் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு,காளையார்கோவில் ஊராட்சி மன்றத்தலைவர் எ.ஜோஸ்பின் மேரி, தலைமை வகித்து, நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு, ஊராட்சியில், மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
அதில் ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், அண்ணல் காந்தியடிகளின் பிறந்ததினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், தேசிய ஊராட்சிகள் தினம் மற்றும் உலக தண்ணீர் தினம் என ஆண்டிற்கு 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்ததன் அடிப்படையில், உலக தண்ணீர் தினமான, சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் சிறப்பாக நடைபெறுகின்றன.
இதன்மூலம் ஊராட்சியின் வளர்ச்சிக்கும் மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்துவதற்கும் அரசின் திட்டங்கள் பயனாளி களுக்கு வழங்குவதற்கான பயனாளிப்பட்டியல் தேர்வு செய்வதற்கும் கிராம சபைக்கூட்டம் மிகப்பயனுள்ளதாக இருந்து வருகின்றன. கிராம சபைக்கூட்டத்தில், நிறைவேற்றப்படும் தீர்மானம் என்பது நிலையான ஒன்றாக இருக்கும். அதன்படி, மக்கள் முன்னிலையில் ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்து எதிர்க்காலத் தேவைகளை நிறைவேற்ற பேசி முடிவு செய்ய இந்தக்கூட்டம் மிகப்பயனுள்ளதாக அமையும்.
நீரின்றி அமையாத உலகு என்ற நோக்கில், தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் வாழ இயலாது. தண்ணீர் என்பது நம் வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கமாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத் தின் அனைத்துப் பகுதிகளிலும் நீர் ஆதாரங்களை மேம்படுத்திடும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். தண்ணீர் மேலாண்மை தமிழகத்தின் முன்னுரிமை, நீர் ஆதாரங்களை காப்போம், நிலத்தடி நீரினைக் காப்போம் என்ற அடிப்படையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்டத்தில் நீர்நிலைகளை மேம்படுத்திடும் பொருட்டு கலைஞரின் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதுதவிர, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகள் தற்போது, நடைபெற்று 36 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வருகின்ற 2023-2024-ஆம் நிதியாண்டில் மீதமுள்ள வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புக்கள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கென காவேரி கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 8 மாதகாலத்திற்குள் அப்பணிகள் நிறைவு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு குடிநீர் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல் விவசாய பெருங்குடி மக்களின் பாசனத்திற்கு தேவையான நீரினை சேமிப்பதற்கு ஏதுவாக, நீர்நிலைகளை சீரமைத்திடும் அடிப்படையில், தற்போது மாவட்டத்தில் 187 கண்மாய்கள் சீரமைப்பதற்கான பணிகள்; நடைபெறவுள்ளது. மேலும், நீர்நிலைகளை புதிதாக உருவாக்குவதற்கான திட்டத்தினையும் செயல்படுத்திட தமிழக அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, நடப்பாண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 43 ஆழ்துணை கிணறுகள் அமைக்கப் பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டிலும் 46 ஆழ்துணை கிணறுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.2023-2024-ஆம் நிதியாண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.62.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில், கலைஞரின் வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழும், விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை ஆகியவைகளை ஒருங்கிணைத்து இவ்வூராட்சியின் மேம்பாட்டிற்கென பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை, பாதுகாத்திடவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்து, மக்கள் இயக்கமாக ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
மேலும், ஊராட்சியினுடைய வளர்ச்சிக்கேற்ப பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வழங்க அரசு தயார் நிலையில் இருந்து வருகின்றன. பொதுமக்களாகிய நீங்கள் இதுபோன்றத் திட்டங்களில் தங்களது பங்களிப்பை முழுமையாக அளித்து ஊராட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.
இந்தக் கிராமசபைக் கூட்டத்தில் , தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் காளையார்கோவில் ஊராட்சியைச் சார்ந்த 3 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு தலா ரூ.1. லட்சம் வீதம் சமுதாய முதலீட்டு நிதிக்கடனுதவியும், 1 பயனாளிக்கு ரூ.25,000 மதிப்பீட்டில் நலிவுற்றோருக்கான நிதியுதவிக்கான காசோலையும் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சமுதாய திறன் பள்ளியில் பயிற்சியாளர்கள் 5 நபர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்கள் மற்றும் உபகரணங்களையும், ஊராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் ஆ.இரா.சிவராமன், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கோ.ராஜேஸ்வரி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் த கு.சுகிதா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் அ.சரஸ்வதி, இணை இயக்குநர் வேளாண்மைத்துறை ஆர்.தனபாலன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) கு.அழகுமலை, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.விஜய்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேல், மாவட்ட சமூகநல அலுவலர் ப.அன்பு குளோரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமகள், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியன் மற்றும் அரசு அலுவலர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu