ஏப்.27-ல் சிவகங்கையில் கணினி திருத்த சிறப்பு முகாம்
பைல் படம்
சிவகங்கை மாவட்டத்தில் பட்டா தொடர்பான திருத்தங்களை மேற்கொள்ள நடைபெறவுள்ள கணினி திருத்த சிறப்பு முகாமினை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, 27.04.2022 அன்று தேவகோட்டை வட்டத்தில் மாவிடுதிக்கோட்டை மற்றும் தளக்காவயல் கிராமங்களிலும், திருப்பத்தூர் வட்டத்தில் கோட்டையிருப்பு மற்றும் திருவுடையார்பட்டி கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் கீழமங்களம் மற்றும் மலம்பட்டி கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டத்தில் விட்டனேரி கிராமத்திலும் நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu