மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தந்தையை கொலை செய்த மகன் கைது

மது அருந்த பணம் கொடுக்க மறுத்த  தந்தையை  கொலை செய்த மகன் கைது
X

தந்தையை கொலை செய்த வழக்கில் கைதான மகன் முகுந்தன்

சிங்கம்புணரி அருகே மது அருந்த பணம் தராத தந்தை கழுத்தை நெறித்து கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்

சிங்கம்புணரி அருகே மது அருந்த பணம் தராத தந்தை கழுத்தை நெறித்து கொலை செய்த மகனை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வம் (59), இவரது மகன் முகுந்தன் (23) டிப்ளமோ பட்டதாரி.படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள இவர் நாள்தோறும் இரவில் வீட்டு மாடியிலேயே அமர்ந்து மது அருந்து வழக்கம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று இரவும் வீட்டு மாடியில் அமர்ந்து மது அருந்தியவர், போதை ஏறவில்லை என கூறி மேலும் மது அருந்த தனது தாயிடம் பணம் கேட்டு அடித்துள்ளார்.பின்னர் உடல்நலக்குறைவால் படுத்திருந்த தந்தையிடமும் பணம் கேட்ட போது, அவரும் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகுந்தன், துணியால் தந்தையின் கழுத்தை நெரித்துள்ளார்,

எதிர்பாராத இந்த சம்பவத்தால் தந்தை செல்வம் மூச்சு திணறி இறந்து போனார். இதனை, தனது தங்கையிடம் போனில் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த சிங்கம்புணரி போலீசார், இறந்த செல்வத்தின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, முகுந்தனை கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!