சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்
சிவகங்கை மாவட்டத்தில் பயனாளிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Sivagangai District Welfare Assistance
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், இன்று (09.02.2024) பல்வேறு வளர்ச்சித் திட்டபணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்:
முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர்வழியில்,தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்துத்துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், குறிப்பாக கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அத்திட்டங்களின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் தமிழக முழுவதும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கிராமங்கள் நிறைந்த மாவட்டமாக திகழ்ந்து வரும் சிவகங்கை மாவட்டத்தில், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் தேவைகளை நிறைவேற்றும் விதமாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த கிராமங்களின் அடிப்படை வசதி மற்றும் தேவைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.
அதன்படி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகள் உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும்,தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, வளர்ச்சிப் பணிகளையும் அனைத்து ஊராட்சிகளிலும் மேம்படுத்துவது எனது தலையாய கடமையாகும். அதன்படி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கிணங்க, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றைய தினம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நாகப்பா மருதப்பா மேல்நிலைப்பள்ளியில் தனியாரின் பங்களிப்புடன்(துவார் சந்திரசேகர்) ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட பயோ செப்டிக் டாங்க் மற்றும் ரூ.02.00 இலட்சம் மதிப்பீட்டில் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள கொட்டகை ஆகியவைகளை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு, இப்பள்ளியில் நீட் தேர்வுக்கான பாடப்புத்தகங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் பேரூராட்சி வார்டு எண்-1 அச்சுக்கட்டு பகுதியில் கூட்டுறவுத்துறையின் பாம்கோ சார்பில் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை கட்டுப்பாட்டில் 1354 குடும்ப அட்டையுடன் செயல்பட்டு வரும் திருப்பத்தூர் மெயின் 2 நியாய விலைக்கடையிலிருந்து அச்சுக்கட்டு தெரு, சீதளிவடகரை ஆகிய பகுதிகளில் 654 குடும்ப அட்டைகளை பொதுகமக்களின் நலன் கருதியும் கூட்ட நேரிசலை தவிர்க்கும் பொருட்டு, திருப்பத்தூர் மெயின் -8 என்ற புதிய நியாய விலைக்கடை பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்களை பெறுகின்ற வகையில் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டு, கீழச்சீவல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் பல்நோக்கு சேவை சங்கமாக செயல்படுத்துவதற்கென வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியிலிருந்து 1 பயனாளிக்கு ரூ.13.92 இலட்சம் மதிப்பீட்டிலான மானியத்தொகையுடன் கூடிய டிராக்டர் வாகனமும் மற்றும் திருப்பத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி லிட் சார்பில், நகை கடன் தொடர்பாக மேல் முறையீடு செய்த 10 பயனாளிகளுக்கு ரூ.02.75 இலட்சம் மதிப்பீட்டில் தள்ளுபடிக்கான ஆணைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பத்தூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட தெம்மாப்பட்டு பகுதியில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய கழிப்பறை கட்டிடம் மற்றும் இந்திரா நகர் பகுதியில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய கழிப்பறை கட்டிடம் ஆகியவைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாணியங்காடு ஊராட்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட அமுதம் நியாய விலைக்கடை எண்-1ல் இருந்த 1465 குடும்ப அட்டைகளில் வாணியம்பட்டி கிராமத்தைச் சார்ந்த 235 குடும்ப அட்டைகளை வாணியம்பட்டி கிராமத்திற்கு பிரிக்கப்பட்டு அக்குடும்ப அட்டை தாரர்களுக்கு பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையினையும், மேலும் தெம்மாப்பட்டு நியாய விலைக்கடையிலிருந்தண ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தைச் சார்ந்த 161 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனுள்ள வகையில் ஆத்தங்கரைப்பட்டி கிராமத்திற்கு பிரிக்கப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக்கடையும் இன்றைய தினம் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூலாங்குறிச்சி
ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நன்கொடையாளர் துவார் சந்திரசேகர் அவர்களால் ரூ.03.00 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணாக்கர்களுக்கு மேஜை நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில், வாராப்பூர் ஊராட்சியில், பால் உற்பத்தியாளர்களுக்கு பயனுள்ள வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.15.27 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடத்தினையும், மற்றும் குறும்பலூர் கிராமத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன்கீழ் என்னால் ஒதுக்கப்பட்டு ரூ.06.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையினையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குளத்துப்பட்டி ஊராட்சி மேட்டாம்பட்டி கிராமத்தில் ஏற்கனவே உள்ள மின்மாற்றியில் இருந்த மின் இணைப்புக்களை பிரித்து புதிய மின்மாற்றியை மொத்தம் 45 மின் இணைப்புக்களுக்கென ரூ.07.21 இலட்சம் மதிப்பீட்டில் 63முஏயு ஃ 11 முஏ திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றி என, ஆக மொத்தம் திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் திருப்பத்தூர் , சிங்கம்புணரி எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் 14 திட்டப்பணிகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் பயன்களை பொதுமக்கள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும். அதுவே அத்திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படையானதாகும். எனவே, தனிநபர் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெறுவதற்கான உரிய வழிமுறைகள் குறித்தும், முதலில் அறிந்து கொண்டு
அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளின் போது, பிரான்மலை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் , கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பங்கேற்று சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்தவ.மோகனச்சந்திரன், இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ஜூனு திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் தலைவர் கோகிலாராணி நாராயணன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சண்முகவடிவேல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத், கூட்டுறவுத்துறை துணை பதிவாளகர்கள் ஸ்ரீமான், குழந்தைவேலு, குமரன், மின் வாரிய உதவி இயக்குநர் ஜான் கென்னடி ,திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், சிங்கம்புணரி வட்டாட்சியர் அந்தோனி ராஜ், நன்கொடையாளர் துவார் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu