சிவகங்கை மாவட்டத்தில் நீரினை பயன் படுத்துவோர் சங்க தேர்தல் : மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை மாவட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 29.12.2022 அன்று நடைபெறவுள்ளது. போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் டிசம்பர் 12 முதல் 16-க்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்திற்கான தேர்தல் வருகின்ற 29.12.2022 அன்று நடைபெறவுள்ளது. போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் டிசம்பர் 12 முதல் 16-க்குள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய வட்டங்களில், திட்டங்களின் கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்ட நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 29-ல் நடைபெற உள்ளது.
இப்பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து டிசம்பர் 12 முதல் 16 வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.டிசம்பர் 19-ல் வேட்பு மனு பரிசீலனையும் மற்றும் வேட்பு மனு திரும்பப் பெறுதல் நடைபெறும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். டிசம்பர் 29-ல் காலை 07.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்று மாலை 04.00 மணிக்கு ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
சிவகங்கைக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), காளையார்கோவிலுக்கு சிவகங்கை வடிப்பக அலுவலர் ஃ துணை ஆட்சியர், மானாமதுரைக்கு சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர், இளையான்குடிக்கு சிவகங்கை மாவட்ட வழங்கல் அலுவலர், திருப்புவனத்திற்கு சிவகங்கை தனித்துணை ஆட்சியர் சமூகப் பாதுகாப்புத் திட்டம், தேவகோட்டைக்கு சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், காரைக்குடிக்கு தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், திருப்பத்தூருக்கு சிவகங்கை மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்), சிங்கம்புணரிக்கு சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu