சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 11,76,271 வாக்காளர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம்   11,76,271 வாக்காளர்கள்
X

சிவகங்கை மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்

01.01.2023-தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகின்றன

சிவகங்கை மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 01.01.2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட்ட பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி மையம் விரிவுபடுத்துதல் தொடர்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்களின் ஆலோசனை மற்றும் பொதுமக்களின் ஆலோசனை பெற்று அதனடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் , 01.01.2023-தேதியை தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடப்படுகின்றன.

அதன்படி, காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 153228 ஆண் வாக்காளர்களும் 158417 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 45 வாக்காளர்களும் என 311690 வாக்காளர்களும் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 143106 ஆண் வாக்காளர்களும், 149101 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 03 வாக்காளர்களும் என 292210 வாக்காளர்களும். சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் 145005 ஆண் வாக்காளர்களும் 150170 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 06 வாக்காளர்களும் என, 295181 வாக்காளர்களும்.

மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் 136404 ஆண் வாக்காளர்களும் , 140785 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 01 வாக்காளரும் என, 27190 வாக்காளர்களும் என மொத்தம் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 577743 ஆண் வாக்காளர்களும், 598473 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 55 வாக்காளர்களும் என ஆக மொத்தம் 1176271 வாக்காளர்களும் உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை) சோ.பால்துரை (தேவகோட்டை) தனி வட்டாட்சியர் (தேர்தல்) இரா.மாணிக்கவாசகம், அனைத்து வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர் (தேர்தல்), அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!