சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு: பயனாளிகள் தேர்வு ஆட்சியர் தகவல்
"அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கான பயனாளிகளை தேர்வு செய்ய நடைபெறும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என ஆட்சியர் தகவல்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மதுரைக் கோட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை தாலுகா, பையூர் பிள்ளைவயல் திட்டப் பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ள 608 அடுக்கு மாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்தில், கட்டப்படும் குடியிருப்புகளுக்கு சிவகங்கை நகராட்சி எல்கைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், நகர்புற வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்;கு முன்னுரிமை அளித்து குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகைபோக மீதமுள்ள பயனாளிகளின் பங்குத்தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். மேலும் "அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி, மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேற்கண்ட திட்டப் பகுதிகளில் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர் 1) இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை எனவும் 2) எனது மாத வருமானம் ரூ.25,00க்கு மிகாமலும் உள்ளது எனவும் சான்றளிக்க வேண்டும்.
பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத் தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்பபுற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர் பிள்ளை வயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, சிவகங்கை என்ற முகவரியில் 29.06.2022 முதல் 30.06.2022 வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் சிறபபு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் ரூ.5,000(ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) மதிப்பிற்கான கேட்பு காசோலையினை என்ற பெயரில் எடுத்து, மனுதாரர் பயனாளியின் ஆதார் நகல் (கணவன் மற்றும் மனைவி), வண்ணப் புகைப்படம் - 2 எண்ணம், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்தொகையானது பயனாளியின் பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதத்தொகையினை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu