/* */

Sivaganga District Seed Plant Camp சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில், பணி விதைகள் நடும் முகாம்: ஆட்சியர்.

Sivaganga District Seed Plant Camp சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மாபெரும் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில், சுமார் 461000 (நான்கு இலட்சத்து அறுபத்தொன்றாயிரம்) பனை விதைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

Sivaganga District  Seed Plant Camp  சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில், பணி விதைகள் நடும் முகாம்: ஆட்சியர்.
X

சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சிகளில் பனை விதை நடுதல் முகாம் நடந்தது. 

Sivaganga District Seed Plant Camp

சிவகங்கை மாவட்டத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுமார் மொத்தம் 461000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் நீர் மேலாண்மையை பாதுகாக்கும் வகையில் பல்வேறுத் திட்டங்களை வழங்கி வருவதுடன், விவசாயிகளின் தேவையை உணர்ந்து நிறைவேற்றும் வகையில் தனி நிதி நிலை அறிக்கையுடன் கூடிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இன்றையக்காலக்கட்டத்தில் 70 சதவிகிதம் விவசாயமே பிரதானமாக இருந்து வரும் இந்நிலையில், இவற்றை எந்த அளவிற்கு உயர்த்த வேண்டுமோ அந்த அளவிற்கு பல்வேறு திட்டங்களை வழங்கி விவசாயிகளின் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதன்மூலம் உணவு உற்பத்தியை அதிகப்படுத்தி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்கள் இருந்து வருகின்றன.

அந்தவகையில், மரங்கள் அதிக அளவு வளர்த்து பயன்பெற வேண்டும் என்பதுடன், மீண்டும் பனைமரங்கள் அதிக அளவு வளர்த்து நீர்நிலை ஆதாரங்களை பாதுகாத்திடும் வகையிலும், பழமைவாய்ந்த சிறப்புக்களின் ஒன்றான பனைமரங்கள் வருங்காலத்தில் இளைஞர் சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று , தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.

இத்திட்டத்தினை துறை ரீதியாக செயல்படுத்திடும் பொருட்டு, அச்சமயம் 2 இலட்சம் பனைவிதைகள் நடவு செய்யும் பணியினையும், தமிழ்நாடு முதலமைச்சரால் துவங்கி வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மெகா பனைவிதைகள் நடும் பணி திட்டம் துவக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.அதனடிப்படையில், தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் பனை விதைகள் நடவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மாபெரும் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில், சுமார் 461000 (நான்கு இலட்சத்து அறுபத்தொன்றாயிரம்) பனை விதைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் நடவு செய்யப்பட்டுள்ளது.

இதன் நோக்கம், பாரம்பரியம் வாய்ந்த பனைமரம் வளர்ப்பது மட்டுமன்றி, இதன்மூலம் நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் போன்றப்பகுதிகளின் கரையோரங்களிலும் மற்றும் சாலை ஓரப்பகுதிகளிலும் பனைவிதைகள் நடவு செய்து பனைமரங்கள் வளர்க்கும் பொழுது, விவசாயிகளின் நண்பனாக இருந்து நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கும் வகையில் கரைகள் பலப்படுகின்றன.

அதுமட்டுமன்றி, இதன்மூலம் பல்வேறு வகையான மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் என பல்வேறு வகையிலும் ஏழை எளியோர் மக்களுக்கான நண்பனாக திகழ்ந்து வருகின்றது. இதன் பராமரிப்பு என்பது மிகக்குறைவு. பனைவிதைகள் நடவு செய்து ஓராண்டுகள் பராமரித்தாலே தொடர்ந்து தானாக வளர்ந்து பலனைத்தரக்கூடிய அளவிற்கு சிறப்புவாய்ந்த மரமாகத் திகழ்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாக் கிராமப்பகுதிகளிலும் அதிக அளவு இருந்த பனைமரம் தற்போது குறைந்துள்ளது. அதை மீண்டும் அதிக அளவு வளர்த்து வரும் இளைஞர் சமுதாயம் பாதுகாத்திடும் வகையில் இத்தகையத் திட்டத்தை அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

Updated On: 4 Nov 2023 2:25 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...