சிங்கம்புணரி உழவர் சந்தையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்
உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தைகளை நெறிப்படுத்துதல் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சியிலுள்ள உழவர் சந்தை மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால், கடந்த ஜூன்'2022-ல் திறந்து வைக்கப்பட்ட வாரச்சந்தை ஆகியவைகளை நெறிப்படுத்துதல் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே கிடைக்கப் பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். அதன்படி, பொதுமக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவையான காய்கறிகளை தரமானதாகவும், குறைவான விலையில் கிடைக்கப்பெறச் செய்யும் வகையில், அனைத்துப்பகுதிகளிலும் தினசரி மற்றும் வாரச்சந்தைகளை நிரந்தர இடத்தில் புதிதாகவும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.
அதனடிப்படையில், சிங்கம்புணரி பேரூராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில் உழவர் சந்தை அமைக்கப்பட்டு, அதில் 33 விவசாயிகள் காய்கறி கடைகள் அமைத்துக் கொள்வதற்காக அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. அதில் விற்பனை செய்யப்படுவதற்கான கடைகளை தினமும் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவ்விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசின் வாயிலாக எடை தராசும் வழங்கப்பட்டுள்ளது.
உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு தேiவான குடிநீர் வசதி மற்றும் சமுதாய சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. பல்வேறு அறிவிப்புப்பலகைகள் வாயிலாகவும், ஒலிப்பெருக்கியின் வாயிலாகவும் விளம்பரப்படுத்தி நுகர்வோர்களின் வருகையை மேம்படுத்திடவும் சாலையோரக் கடைகளை ஒழுங்குபடுத்தி, விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்திட ஏதுவாக கூடுதல் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் தினந்தோறும் காய்கறிகளுக்கான விலையினை அறிவிப்புப்பலகையில் எழுதி வைத்திடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
சிங்கம்புணரி பேரூராட்சியில், உள்ள வாரச்சந்தையில் தற்காலிக கூடாரங்கள் மூலம் கடைகள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வந்த நிலையில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று பேரூராட்சி மூலதன நிதியிலிருந்து ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக வாரச்சந்தைக்கான கட்டடம் கட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் , கடந்த 08.06.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில், 152 கடைகளும், குடிநீர் வசதி மற்றும் சமுதாய சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. வாரச்சந்தை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சிங்கம்புணரி பேரூராட்சியில் 20 விவசாயிகள் இணைந்து ஒரு குழு உருவாக்கி, 50 குழுக்கள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி உள்ளனர். இதில் 1,000 விவசாயிகள் உறுப்பினர்களாக பங்கேற்றுள்ளனர். விவசாயிகளின் குழு தொழிழல் தொடங்கிட அரசின் சார்பில் ரூ.25 லட்சம் மூலதன நிதியாக மானியத்தொகை வழங்கப்பட்டது. ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் எண்ணெய் செக்கு இயங்திரம் மானியமாக வழங்கப்பட்டன.
நிறுவனத்தின் மூலம் தங்களது உற்பத்திப் பொருட்களை கொண்டு நல்ணெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் சுத்தமாக எவ்வித கலப்படமும் இல்லாமல் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மாதந்தோறும் 6,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 4,000 லிட்டர் எண்ணெய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரமான முறையில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயார் செய்யப்பட்டு விவசாயிகளின் மூலம் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் ஆர்.சுரேஷ், சிங்கம்புணரி பேரூராட்சித்தலைவர் ப.அம்பலமுத்து, செயலாளர் என்.சாந்தி, துணைத்தலைவர் பி.செந்தில்குமார், வட்டாட்சியர் ச.கயல்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர் அ.மு.ஜான்முகமது, வேளாண் அலுவலர்கள் எ.காளிமுத்து, ப.சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu