சிவகங்கை மாவட்டத்தில் மீன்பாசி குத்தகை: மீன்வளத்துறை அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் மீன்பாசி குத்தகை: மீன்வளத்துறை அறிவிப்பு
X

பைல் படம்

மீனவர் நலத்துறையின் சார்பில் அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், பாதரக்குடி மற்றும் சங்கராபுரம் ஆகிய கண்மாய்கள் ஏலம்

சிவகங்கை மாவட்டத்தில் மீன்பிடி குத்தகைக்காக நான்கு கண்மாய்கள் டெண்டர் விடப்படுகிறது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நான்கு கண்மாய்களான அமராவதி புதூர், செஞ்சை நாட்டார், பாதரக்குடி மற்றும் சங்கராபுரம் ஆகிய கண்மாய்களுக்கு தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள நான்கு கண்மாய்களான அமராவதி புதூர் கண்மாய், செஞ்சை நாட்டார் கண்மாய், பாதரக்குடி கண்மாய் மற்றும் சங்கராபுரம் கண்மாய்களை 2022 -2023-ஆம் ஆண்டு முதல் 2026 – 2027-ஆம் ஆண்டு முடிய ஐந்தாண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கு விடப்படுகிறது.

மேற்படி, நான்கு கண்மாய்களுக்கு தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்திற்கு தொகை ரூ.300 செலுத்தி, ஏல நிபந்தனைகள் மற்றும் ஒப்பந்த படிவங்களை சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 15.12.2022 மாலை 5.45 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். 16.12.2022 பிற்பகல் 2.00 மணிக்கு ஒப்பந்தப்புள்ளி சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 53, யூனியன் வங்கி மாடி, பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை – 630561 என்ற முகவரிக்கும், 04575 – 240848 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா