சிவகங்கை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

சிவகங்கை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
X

முக்குடி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

முக்குடி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பொட்டபாளையம் ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பதற்கென மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்து, முக்குடி ஊராட்சியில் குறுங்காடு வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பசுமையான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில், நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்குள் 50 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 2020-2021-ஆம் ஆண்டு மற்றும் 2021-2022-ஆம் ஆண்டிற்கு குறுங்காடு வளர்ப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த 12.10.2022 அன்று பொட்டபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் 2022-2023-ன் கீழ் சுமார் 3 ½ ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, இதில், மரக்கன்று வகைகளான வேம்பு 150 எண்ணிக்கையும், புங்கை 200 எண்ணிக்கையும், பூவரசு 150 எண்ணிக்கையும், தேக்கு 100 எண்ணிக்கையும், மூங்கில் 100 எண்ணிக்கையும், நிலவாகை 100 எண்ணிக்கையும், வாகை 100 எண்ணிக்கை என மொத்தம் 900 எண்ணிக்கை கொண்ட குறுங்காடு அமைப்பதற்கென, மாவட்ட ஆட்சித்தலைவர், தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், முக்குடி ஊராட்சியில். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் 2021-2022-ம் ஆண்டில் குறுங்காடு வளர்ப்பதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டு, கொய்யா, மா, தென்னை, வேம்பு, புளி, வாழை, மூங்கில், முருங்கை, சப்போட்டா, தேக்கு உள்ளிட்ட 20 வகையான சுமார் 4,250 மரக்கன்று வகைகள் நடப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட பகுதியில் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 12.10.2022 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, குறுங்காடு வளர்ப்பதற்கான இடத்தில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் உபகரணங்கள், பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களின் தேவைகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், புதிதாக நடப்படும் மரக்கன்று வகைகளை முறையாக பராமரிக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.குமார், உதவிப் பொறியாளர்கள் தமிழரசி, தேவிகா, திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க.அங்கயங்கண்ணி (வ.ஊ.), டி.ராஜசேகரன் (கி.ஊ), ஒன்றியப்பணி மேற்பார்வையாளர் செல்வம் மற்றும் ஒன்றியப் பணியாளர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story