சிவகங்கை அருகே மக்கள் தொடர்பு முகாம்: ரூ.1.69 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை அருகே மக்கள் தொடர்பு முகாம்: ரூ.1.69 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
X

சிவகங்கை வட்டம், சக்கந்தி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், , பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி

மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள்,நலத்திட்டங்கள் தொடர்பாக 277 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

சிவகங்கை மாவட்டம்,சக்கந்தி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ,பல்வேறு துறைகளின் சார்பில் 288 பயனாளிகளுக்குரூ.1.69 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், சக்கந்தி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை வட்டம், சக்கந்தி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இம்மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 277 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில், தகுதியுடைய 86 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்னைறயதினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இக்கிராமத்தைப் பொறுத்த வரையில், அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், கோமாரி தடுப்பூசி முகாம்கள் அனைத்து கிராமப் பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

கூட்டுறவுத்துறையின் சார்பில், கால்நடை பராமரிப்பு கடனுதவி மற்றும் பயிர்க்கடனுதவிகளும், பொதுச்சுகாதாரத் துறையின் சார்பில் மக்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை வழங்குதல் மற்றும் பெண் கல்வியைஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம், மாணாக்கர்களுக்கான காலை உணவுத்திட்டம், ஊட்டச்சத்து குறைபாடுயுடைய குழந்தைகளை கண்டறிந்து, ஊட்டச்சத்து மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகள், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவைகள் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அத்திட்டங்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்து முதலில் அறிந்து கொண்டு, அத்துறையைச் சார்ந்த அலுவலர்களை அணுகி, அதன் மூலம் பயன்பெற்று, தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், நலிந்தோர் குடும்ப நல உதவித் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.2,00,000 மதிப்பீட்டிலான இயற்கை மரணம் நிவாரணம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு ரூ.45,000 மதிப்பீட்டிலான இயற்கை மரணம் நிவாரணம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 06 பயனாளிகளுக்கு ரூ.6,000 மதிப்பீட்டிலான விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 59 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.88,500 மதிப்பீட்டிலான மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 05 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,

ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை ஒப்படைப்பிற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.78,840 மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், மடக்கு சக்கர நாற்காலி, தக்கள் செயலிகளுடன் கூடிய திறன்பேசி ஆகிய உபகரணங்களையும், 06 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாவிற்கான ஆணைகளையும், 02 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 93 பயனாளிகளுக்கு ரூ.23,25,000 மதிப்பீட்டிலான இ.பட்டாவிற்கான ஆணைகளையும் (ஆதிதிராவிடர் இலவச வீட்டுமனைப்பட்டா), வட்ட வழங்கல் பிரிவின் சார்பில் 16 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும்,

சமூகநலத்துறையின் சார்பில் முதலமைச்சர் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 05 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2,50,000 மதிப்பீட்டிலான காசோலைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.45,000 மதிப்பீட்டிலான தேய்ப்பு பெட்டிகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில், 03 பயனாளிகளுக்கு ரூ.64,580 மதிப்பீட்டிலான வேளாண் கருவிகளையும், 05 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பீட்டிலான தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்திற்கான ஆணைகளையும், 05 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து கிட்களையும், 09 பயனாளிகளுக்கு ரூ.2,52,000 மதிப்பீட்டிலான கிசான் கடன் திட்டத்திற்கான ஆணைகளையும், மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், 10 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.47,34,000 மதிப்பீட்டில் கடனுதவிகளுக்கான ஆணைகளையும்,

கூட்டுறவுத்துறையின் சார்பில் காஞ்சிரங்கால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 05 மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு ரூ.28,30,000 மதிப்பீட்டிலான கடனுதவிகளுக்கான ஆணைகளையும், பையூர் பிள்ளைவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.1,40,000 மதிப்பீட்டிலான பால்மாடு பராமரிப்பு கடனுதவிக்கான ஆணைகளையும், பனையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 04 பயனாளிகளுக்கு ரூ.2,17,000 மதிப்பீட்டிலான பயிர்க் கடனுதவிக்கான ஆணைகளையும்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 10 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.49,43,000மதிப்பீட்டில் கடனுதவிகளுக்கான ஆணைகளையும், 03 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.75,000மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் கடனுதவிகளுக்கான ஆணைகளையும், அமுதசுரபி கடனுதவியாக 02 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.50,000வீதம் மொத்தம் ரூ.1,00,000மதிப்பீட்டில் கடனுதவிகளுக்கான ஆணைகளையும், 04 பயனாளிகளுக்கு தலா ரூ.40,000வீதம் மொத்தம் ரூ.1,60,000

மதிப்பீட்டில் வட்டார வணிக வள மையம் தொழிற் கடனுதவிகளுக்கான ஆணைகளையும், கால்நடைப்பராமரிப்புத் துறையின் சார்பில் நாட்டுக்கோழி பண்ணை நிறுவும் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு மானியத்துடன் ரூ.3,33,250 மதிப்பீட்டிலான ஆணையும் என மொத்தம் 288 பயனாளிகளுக்கு ரூ.1,69,38,000 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முககையின் திட்ட இயக்குநர் ஆ.இரா.சிவராமன், இணைப்பதிவாளர் (கூட்டுறவுச் சங்கங்கள்) கோ.ஜீனு, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, சிவகங்கை ஒன்றியக்குழுத் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கே.பி.ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பத்மாவதி, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) (பொ) வே.சாந்தி, இணை இயக்குநர்கள் ஆர்.தனபாலன் (வேளாண்மைத்துறை),

மரு.நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை), துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) கு.அழகுமலை, உதவி ஆணையர் (கலால்) சி.ரத்தினவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் க.நஜிமுன்னிசா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேலு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் டி.கண்ணன், தாட்கோ மேலாளர் ஜி.முத்துச்செல்வி, மாவட்ட சமூகநல அலுவலர் ப.அன்பு குளோரியா, பனையூர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் கே.மணிமுத்து, சக்கந்தி ஊராட்சி மன்றத்தலைவர் கோமதி, சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!