சிவகங்கையில் மக்கள் தொடர்பு முகாம்: 184 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
சிவகங்கை மாவட்டம்,பள்ளித்தம்பம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர் ப. மதுசூதனரெட்டி
சிவகங்கை மாவட்டம், பள்ளித்தம்பம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 184 பயனாளிகளுக்கு ரூ.72.28 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளைமாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம்,பள்ளித்தம்பம் கிராமத்தில் உள்ள நாடகமேடையில், நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையேற்று , பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அனைத்துத் தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகளையும், அரசின் நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் காளையார்கோவில் வட்டம், பள்ளித்தம்பம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இம்மக்கள் தொடர்பு முகாமினை, முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அதில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அம்மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்னைறயதினம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இக்கிராமத்தைப் பொறுத்த வரையில், அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அத்திட்டங்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்து முதலில் அறிந்து கொண்டு அத்துறையைச் சார்ந்த அலுவலர்களை அணுகி அதன் மூலம் பயன்பெற்று தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார்.
இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 52 பயனாளிகளுக்கு ரூ.792000 மதிப்பீட்டில் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 28 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், வட்ட வழங்கல் பிரிவின் சார்பில் 51 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், 7 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான சான்றுகளும் , வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.7330மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்களையும்,
தோட்டக்கலைத் துறையின் சார்பில்,5 பயனாளிகளுக்கு ரூ.2580 மதிப்பீட்டிலான காய்கறி விதைத்தளை பழமரக்கன்று தொகுப்புகள் மா, கொய்யா, விரிவாக்கம் ஆகிய இடு பொருட்களும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.2570330 மதிப்பீட்டிலான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்திற்கான வங்கிக்கடன் தொகைக்கான காசோலையினையும்,தாட்கோ துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.753092 மதிப்பீட்டிலான டூரிஸ்டர் வாகனம் வாங்குவதற்கான ஆணையினையும்
1 பயனாளிக்கு ரூ.213580 மதிப்பீட்டிலான ஹாலோ பிளாக் தொழில் அமைப்பதற்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு ரூ.499200 மதிப்பீட்டிலான ஜெராக்ஸ் கடை அமைப்பதற்கான ஆணையினையும், மொத்தம் ரூ.1465872 மதிப்பீட்டிலான கடனுதவிக்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.78615 மதிப்பீட்டிலான பல்வேறு உதவி உபகரணங்களையும், கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.667500 மதிப்பீட்டிலான கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 நாட்டுக்கோழிகள் வளர்க்கும் அலகு) 50 சதவிகிதம் அரசு மானியத்தொகைக்கான ஆணையினையும்.
சமூகநலத் துறையின் சார்பில் முதலமைச்சர் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25000வீதம் ரூ.100000 மதிப்பீட்டிலான ஆணைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.300000 மதிப்பீட்டிலான மாடு, ஆடு வளர்ப்பிற்கான கடனுதவிகளுக்கான ஆணைக ளையும்,
கூட்டுறவுத்துறையின் சார்பில் , புலியடித்தம்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.174000மதிப்பீட்டில் பயிர்க்கடனுதவிக்கான ஆணைகளையும் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.1070000 மதிப்பீட்டிலான சேமிப்பு அடிப்படைக்கான ஆணைகளும் பொது சுகாதாரத்துறையின் சார்பில் 5 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்திற்கான பெட்டகங்களும் என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ.7228127 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
அதன்தொடர்ச்சியாக, பள்ளித்தம்பம் கிராமத்தில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில், முதியோர்களுக்கான ஓய்வூதியத்தொகை அவர்கள் வங்கிக்கணக்கில் ஆதார் இணைப்பு பதிவேற்றம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து , வேளாண்மைத் துறை , பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, ஒன்றியக்குழுத் தலைவர் கோ.ராஜேஸ்வரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஸ்டெல்லா, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) (பொ) பி.சாந்தி , இணை இயக்குநர்கள் ஆர்.தனபாலன் (வேளாண்மைத்துறை), மரு.நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை), துணை இயக்குநர்கள் (தோட்டக்கலைத்துறை) கு.அழகுமலை.
(சுகாதாரம்) மரு.விஜய்சந்திரன் உதவி ஆணையர் (கலால்) சி.ரத்தினவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் து.கதிர்வேலு,மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் டி.கண்ணன், தாட்கோ மேலாளர் திருமதி ஜி.முத்துச்செல்வி மாவட்ட சமூகநல அலுவலர் ப.அன்பு குளோரியா பள்ளித்தம்பம்; ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகப்பிரியா, காளையார்கோவில் வட்டாட்சியர் பஞ்சவர்ணம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu