சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கல்
சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட 5 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இலவச மிதி வண்டிகள் வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட 5 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.30.67 இலட்சம் மதிப்பீட்டில்இ மொத்தம் 603 மாணாக்கர்களுக்குவிலையில்லா மிதிவண்டிகளை வழங்கி நெற்குப்பை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளி கலையரங்கத்தினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் , அனைத்துத்துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில் சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் வழங்கி வருகிறார்.அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் , தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களும் அதன் பயன்களும் கிடைக்கப்பெற செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான நான், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் அரசின் நலத்திட்டங்கள் மூலம் பொதுமக்களை பயன்பெற செய்வதற்கும் அதுமட்டுமன்றி மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளையும் துரிதமாக மேற்கொள்வதற்காக நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறேன்.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் காவேரி-குண்டாறு இணைப்பு திட்டமும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர், கல்வித்துறையில் நடப்பு நிதியாண்டில் ஏறத்தாழ 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்த வருகிறார்கள். அறிவுப்போட்டி நிறைந்த இக்காலகட்டத்தில் மாணவர்கள் நவீன காலத்திற்கு ஏற்ப தங்களது அறிவுத்திறன் மற்றும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
சாமானிய மக்களும் கல்வியை பெரும்வகையில் பள்ளிக்கல்வி மட்டுமின்றி கல்லூரி வரையிலும் இலவசமாக கல்வியை மாணாக்கர்கள் பெறுவதற்கும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தலைசிறந்து விளங்கிடும் வகையிலும், முன்னாள் முதல்வர் வழிவகை செய்தார். அவ்வழியில் தமிழ்நாடு முதலமைச்சர், காலை உணவு திட்டம் மற்றும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் போன்ற முன்னோடி திட்டங்களை புதிதாகவும் செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தேர்ந்து வருகிறார்கள். மாணாக்கர்களுக்கு அறிவுக் கூர்மை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஆரோக்கியமான உடல் நலத்தையும் அளிப்பதற்காக சத்தான உணவுகளை வழங்குவதற்கு வழிவகை ஏற்படுத்தியுள்ளார்.
பெற்றோர்களின் சிரமத்தை பொருளாதார ரீதியாக குறைத்துவிடும் வகையில் முதலமைச்சர், அனைத்து மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களின் நிலையிலிருந்து அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார். மேலும்,பள்ளிகளின் மேம்பாட்டு வசதிக்காக முன்னாள் மாணவர் சங்க மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசுடன் இணைந்து செயல்படுத்துவதற்கும் முன் வரலாம்.
கல்லை வடித்து சிற்பியாக நல் வடிவம் கொடுப்பதைப்போல், அதனைப் போல் ஆசிரியர்களும் ஒவ்வொரு மாணாக்கர்களின் மனநிலையை அறிந்து,அவர்களுக்கு ஏற்றார் போல் தரமான கல்வியை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டியாகவும் அடிப்படையாகவும் திகழ்ந்து வருகிறார்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கனவை நினைவாக்குகின்ற வகையிலும் மாணாக்கர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களை முன்னேற்ற பாதையில் வழி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்திடும் வகையில் மாணாக்கர்கள் நல்ல முறையில் கல்வி கற்று தங்களது வாழ்க்கை தரத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளி மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் ஒன்றான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 67 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 37 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மொத்தம் 5715 மாணவர்கள் 6775 மாணவியர்கள் என, ஆக மொத்தம் 12490 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் நெற்குப்பை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் 85 மாணவர்களுக்கு தலா ரூ.5175வீதம் ரூ.439875 மதிப்பீட்டிலும் மற்றும் 70 மாணவியர்களுக்கு தலா ரூ.4992வீதம் ரூ.349440 மதிப்பீட்டிலும் என, மொத்தம் 155 மாணவஇ மாணவியர்களுக்கு ரூ.789315 மதிப்பீட்டிலும், பூலாங்குறிச்சி டி.எம். அரசு மேல்நிலைப்பள்ளியில் 47 மாணவர்களுக்கு தலா ரூ.5175வீதம் ரூ.243225 மதிப்பீட்டிலும் மற்றும் 42 மாணவியர்களுக்கு தலா ரூ.4992வீதம் ரூ.209664 மதிப்பீட்டிலும் என, மொத்தம் 89 மாணவ மாணவியர்களுக்கு ரூ.452889 மதிப்பீட்டிலும், வி.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 26 மாணவர்களுக்கு தலா ரூ.5175வீதம் ரூ.134550 மதிப்பீட்டிலும் மற்றும் 27 மாணவியர்களுக்கு தலா ரூ.4992வீதம் ரூ.134784 மதிப்பீட்டிலும் என, மொத்தம் 53 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.269334 மதிப்பீட்டிலும் புழுதிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 72 மாணவர்களுக்கு தலா ரூ.5175 வீதம் ரூ.372600 மதிப்பீட்டிலும் மற்றும் 85 மாணவியர்களுக்கு தலா ரூ.4992 வீதம் ரூ.424320 மதிப்பீட்டிலும் என ,மொத்தம் 157 மாணவ, மாணவிகளுக்கு ரூ.796920 மதிப்பீட்டிலும்,
கட்டுக்குடிப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 36 மாணவர்களுக்கு தலா ரூ.5175 வீதம் ரூ.186300 மதிப்பீட்டிலும் மற்றும் 36 மாணவியர்களுக்கு தலா ரூ.4992வீதம் ரூ.179712 மதிப்பீட்டிலும் என, மொத்தம் 72 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.366012 மதிப்பீட்டிலும், கட்டுக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 44 மாணவர்களுக்கு தலா ரூ.5175வீதம் ரூ.227700 மதிப்பீட்டிலும், மற்றும் 33 மாணவியர்களுக்கு தலா ரூ.4992- வீதம் ரூ.164736 மதிப்பீட்டிலும் என, மொத்தம் 77 மாணவஇ மாணவியர்களுக்கு ரூ.392436 மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் மேற்கண்ட 5 பள்ளிகளைச் சார்ந்த 603 மாணவ மாணவியர்களுக்கு ரூ3066906மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
சூற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் அடிப்படையாக மிதிவண்டிகள் விளங்கி வருகிறது. இந்நிகழ்ச்சிகளின் மூலம் விலையில்லா மிதிவண்டிகளை பெற்றுள்ள மாணாக்கர்கள் அனைவரும் சாலை விதிகளைப் பின்பற்றி, முறையாக மிதிவண்டிகளை செலுத்த வேண்டும். இதுபோன்று, மாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணாக்கர்கள் திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, மேற்கண்ட பள்ளிகளில் 2021-2022-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் அந்தந்தப் பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகையினை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் முதல் பரிசுத்தொகை ரூ.5000, இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3000, மற்றும் மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2000 ஆகியவைகளையும் மற்றும் புரவலர் திட்டத்தின் கீழ் மேற்கண்ட பள்ளிகளில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், தலா ரூ.10000வீதம் பங்களிப்புத் தொகையினையும் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
மேலும், தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் ஊரக திறனாய்வுத் தேர்வு ஆகியவைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சிகளுக்கு வருகை புரிந்த பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களையும் பெற்றுதகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளின்போது, நெற்குப்பை பேரூராட்சி சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலையரங்கத்தினை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் ப.சண்முகநாதன், பேரூராட்சித் தலைவர்கள் அ.குசலான் (நெற்குப்பை), அம்பலமுத்து (சிங்கம்புணரி), சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu