சிவகங்கையில் செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி

சிவகங்கையில் செய்தி- மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி
X

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம், முன்னிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்

அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் புகைப் படங்கள் இடம் பெற்றுள்ள இக்கண்காட்சியானது 10 நாள்கள் நடைபெறவுள்ளது

சிவகங்கையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் முத்தான திட்டங்கள் குறித்த அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம், முன்னிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் முத்தான திட்டங்கள் குறித்த "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், புகைப்படக்கண்காட்சி அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில், சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக தனி அரங்கம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னூர் காப்போம் திட்டம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்து, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டு மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ன. இப்புகைப்படக் கண்காட்சி நடைபெறும் நாட்களில் தினமும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையின் சார்பில் மாணவ, மாணவிகளை கொண்டு கலைநிகழ்ச்சிகளும், கலைப்பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறையின் சார்பில் ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

மேலும், சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசித்து வரும் மக்களுக்கும், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அதன் பயன்கள் வழங்கியவை தொடர்பாகவும், அரசின் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் புகைப் படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இப்புகைப்படக் கண்காட் சியானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

சிவகங்கை மாவட்ட மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆ.இரா.சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் கு.சுகிதா, ஆவின் பால்வளத் தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!