பெட்ரோல் பங்க் தடையில்லா சான்று இணைய வழி மூலம் விண்ணப்பம்: ஆட்சியர் தகவல்

பெட்ரோல் பங்க் தடையில்லா சான்று இணைய வழி மூலம் விண்ணப்பம்: ஆட்சியர்  தகவல்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி

Petrol Bunk Unrestricted Certificate Online Application

நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவை தடையின்மைச் சான்று பெற்றிடதமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை மாவட்டத்தில், நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான தடையின்மைச்சான்று பெறுவதற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பம் செய்ததின் பேரில் தடையின்மை சான்று வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, முதன்மைச் செயலர் - வருவாய் நிர்வாக ஆணையர், சென்னை 07.06.2022-ம் நாளிட்ட கடிதத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற்றிட, தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் காலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற்றிட தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்