சுதந்திர போராட்ட தியாகிகள் தொடர்பாக சிவகங்கையில் நிரந்தர புகைப்படக் கண்காட்சி
சுதந்திரப்போராட்ட தியாகிகளின் புகைப்படக்கண்காட்சியை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்திய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. மதசூதன்ரெட்டி
சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் பெரிதும் அறிந்திடாத சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிக் காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின்; புகழை பறைசாற்றுகின்ற வகையிலும், பொதுமக்கள், எதிர்காலச்சந்ததியினர் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் புகைப்படக்கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல்தளத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் பெரிதும் அறிந்திடாத சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்களின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தரப் புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
நமது இந்திய திருநாட்டில் 75-வது சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய திருநாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோர்களின் புகழை பறைசாற்றுகின்ற வகையிலும், பொதுமக்கள் பெரிதும் அறிந்திடாத சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோர்களை பொதுமக்களும், எதிர்காலச் சந்ததி யினரும் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நிரந்தரப் புகைப்படக் கண்காட்சி அமைத்திட அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிக்காவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் ஆகியோர்களின் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தரப் புகைபடக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில், நமது சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், திருப்பத்தூரைச் சார்ந்த தியாகி எ.ச.முத்துசாமி, தியாகி நமோ.கண்ணுச்சாமி, பீர்முகம்மது இராவுத்தர், ஜி.இராஜகோபால், கூரிநாதர்பிள்ளை, தியாகி அ.கல்யாணசுந்தரம், சிவகங்கையைச் சார்ந்த தியாகி எம்.மாணிக்கம், தியாகி முத்துபாலகிருஷ்ணன், தியாகி மு.பொ.சின்னத்துரை, தியாகி ஜி.மாயழகு (அதிகரம்), தியாகி இராமஅங்குச்சாமி (ஏனாபுரம்).
தேவகோட்டையைச் சார்ந்ததியாகி சின்ன அண்ணாமலை செட்டியார், தியாகி ஆர்.எம்.அண்ணாமலை செட்டியார், தியாகி டி.எஸ்.இராமனாதன், தியாகி எ.கருப்பையா பண்டிதன், திருப்புவனத்தைச் சார்ந்த தியாகி எம்.நடராஜன், தியாகி எ.விஅம்பலம், கொன்னாத்தான்பட்டியைச் சார்ந்த தியாகி முத்து (ஐ.என்.ஏ.), தியாகி ,அப்துல் முத்தலீப் (ஐ.என்.ஏ.), தியாகி கருப்பன் செட்டியார் (ஐ.என்.ஏ.) (பள்ளத்தூர்), தியாகி உல.நடராஜன் அம்பலம் (நாமனூர்), தியாகி மு.கருப்பையா (படமாத்தூர்), தியாகி எம்.இராமு என்ற உடையார் (கீழாயூர்), தியாகி எஸ்.இராஜபிள்ளை(எஸ்.புதூர்), தியாகி இராமையாதேவர் (திருவேகம்பத்தூர்), ஆகியோர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்புகைப்படக்கண்காட்சியினை கண்டு களித்து, நமது சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகழை அறிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் மு.முத்துக்கழுவன் (சிவகங்கை), சி.பிரபாகரன் (தேவகோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சௌந்தரராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாகராஜபூபதி, தனித்துறை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) மு.காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் சி.ரெத்தினவேல், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ம.மங்களநாதன், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலர் சு.தனலெட்சுமி மற்றும் அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu