சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில்  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X

பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், முதியோர் உதவி தொகை, விதவை மகள் மறுவாழ்வு உதவி தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 342 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருப்புவனம் சார்ந்த 11 பயனாளிகளுக்கு பல்வேறு உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைகான ஆணைகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.12,00,000 மதிப்பீட்டிலான மானியத்தொகைக்கான ஆணைகளையும், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000வீதம் ரூ.2,00,000 மதிப்பீட்டிலான மகளிர் தொழில் முனைவோர் கடனுதவிக்கான ஆணைகளையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூன்றுசக்கர சைக்கிள், மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், தோள்பட்டை தாங்கி, முழங்கை தாங்கி என 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.49,700 மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் என ஆக மொத்தம் 28 பயனாளிகளுக்கு ரூ.14,49,700 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, தேசிய பெண் குழந்தைகள் தினம் தொடர்பான உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் மது சூதன் ரெட்டி தலைமையில் ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கே.கே.கோவிந்தன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!